திமுக கூட்டணிக்குள் சலசலப்பு…!! “சுவர் விளம்பரத்தால் எழுந்த சிக்கல்..!? என்ன செய்வார் முதல்வர்!??

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டிற்காக சுவர் விளம்பரம் எழுதப்பட்டிருந்தது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ...
vck vs cpi
vck vs cpi
Published on
Updated on
2 min read

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் திமுக தேர்தல் பணிகளை விரைந்து முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் இலக்கு வைத்து திமுக தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்பதற்காக திமுக தொடர்ந்து உழைத்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த அதிமுக பாஜக கூட்டணி தற்பொழுது மீண்டும் கூட்டணியை அமைத்து இருக்கிறது.  இந்த கூட்டணியை வெற்றி பெற வைக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை திமுக எடுத்து வருகிறது. 

அதிமுக - பாஜக கூட்டணி வலுவிழந்து இருப்பதை கண்கூடாக பார்க்கமுடிகிறது. ஆனால் அதற்காக திமுக கூட்டணியில் பூசல் இல்லை என்றெல்லாம் இல்லை. கருத்தியல் ரீதியாக ஒன்றுபட்டிருப்பதால், கூட்டணிக்கட்சிகள் சிலவற்றை பார்த்துக்கொண்டு போகின்றன என்கின்றனர், ஆர்வலர் சிலர். 

சமீபத்தில் காங்கிரசிற்கு விசிகவுக்கும் கூட ஒரு முரண் ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்தார், அவர் மரியாதையை நிமித்தமாக தான் சந்தித்ததாக கூறினாலும் அது அரசியல் ரீதியான சந்திப்பு தான் என விமர்சகர்கள் பலர் கூறியிருந்தனர். ஆனால் ராமதாஸை சந்தித்த பிறகு செல்வப்பெருந்தகையின் பேச்சு பாமக -திமுகவில் இணைவதையே பிரதிபலிக்கிறது. சமீபத்தில்  "2011-ம் ஆண்டு போல் விசிக​வும், பாமக​வும் ஒரே கூட்​ட​ணி​யில் இருக்க வேண்​டும்" என செல்​வப்​பெருந்​தகை பேசியிருந்தார். 

ஆனால் இவரின் இந்த பேச்சு ‘தன்னிச்சையானது அல்ல… திமுக -வின் ஆசீர்வாதம் இல்லாமல் நடைபெறாது. தாங்கள் பலவீனமாக இருக்கிறோம் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான் அவர்கள் ராமதாஸை பார்க்க செல்வப்பெருந்தகையை அனுப்பி வைத்தனர்” என்கிறார் பத்திரிகையாளர் மணி. ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக “காங்கிரஸ் கட்சி ஒரு கட்சியே இல்லை என சாடியிருந்தார்” வன்னியரசு.

இந்த நிலையில்தான் சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அண்ணா சாலை அண்ணா அறிவாலயம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டிற்காக சுவர் விளம்பரம் எழுதப்பட்டிருந்தது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுவர் விளம்பரத்தை கருப்பு பெயிண்டால் அடித்து விட்டு தங்களது கட்சியின் பெயரை எழுதி உள்ளனர். இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தங்களது சுவர் விளம்பரம் மீது கருப்பு பெயிண்ட் அடித்த விசிக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த கூட்டணி கட்சிகளின் சலசலப்பை எப்படி மு.க.ஸ்டாலின் எதிர்கொள்ளப்போகிறார் என தெரியவில்லை. இது ஒரு சின்ன பிரச்சனையாக இருந்தாலும், நாளை சீட் ஒதுக்கீடு என்று வரும்போது எப்படி இவர்களை திருப்தி படுத்துவார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com