தேமுதிகவுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பாரா மு.க.ஸ்டாலின்?

ஒரு வேளை தேமுதிக - அதிமுக - விஜய் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து விட்டால் நமது நிலைமை?
தேமுதிகவுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பாரா மு.க.ஸ்டாலின்?
Admin
Published on
Updated on
3 min read

சட்டசபைத் தேர்தல் ரொம்ப தூரத்தில் இல்லை. எனவே அனைத்துக் கட்சிகளும் தங்களுக்கான வாய்ப்புகள், முன்னேற்பாடுகள், கூட்டணிகள் குறித்து தீவிரம் காட்டத் தொடங்கி விட்டன. பகிரங்கமாக இன்னும் எந்தப் பேச்சும் தொடங்கவில்லை என்றாலும் கூட திரைமறைவில் படு தீவிரமான வேலைகள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன.

மேலும் படிக்க: இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க.. "மாலை முரசு" வழங்கும் IPL 2025-ன் "Special பரிசை வெல்லுங்க! இது நீங்க எதிர்பார்க்காத வேற லெவல் பரிசுங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை வருகிற சட்டசபைத் தேர்தலில் 5 முனைப் போட்டிக்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. அதாவது திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிகள் போட்டியிடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஒரு வேளை இதில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டு அதிமுக - பாஜக இடையே கூட்டணி ஏற்பட்டால் நான்கு முனைப் போட்டியாக சுருங்க வாய்ப்புள்ளது. அதிமுக- தவெக கூட்டணி அமைத்து பாஜக தனித்து விடப்பட்டாலும் கூட நான்கு முனைப் போட்டி உறுதி. ஆக மொத்தத்தில் 5 முனைப் போட்டி லட்சியம், நான்கு முனைப் போட்டி நிச்சயம் என்ற நிலையே உள்ளது.

மேலும் படிக்க: அழகான பெண்கள்.. ஆபத்தான முடிவுகள்.. தலை சுற்ற வைக்கும் "Honey Trap"! கவுந்துடாதீங்க!

திமுக கூட்டணியில் சில கட்சிகளிடையே மனக் கசப்பு இருந்து வருகிறது. வெளியில் பெரிதாக வெடிக்காவிட்டாலும் கூட நீரு பூத்த நெருப்பாக இருப்பது என்னவோ உண்மைதான். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூடுதல் இடங்களைக் கேட்க வாய்ப்புள்ளது. அதே போல கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூடுதல் இடங்களைக் கேட்கலாம். காங்கிரஸ் கட்சிக்கும் அதிக சீட் கேட்கும் திட்டம் உள்ளது. மறுபக்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகனுக்கும், திமுகவுக்கும் இடையே திடீரென முட்டல் மோதல் அதிகரித்து வருகிறது. நேற்று சட்டசபையில் அனல் கக்கப் பேசினார் வேல்முருகன். இதற்கு உடனடியாக முதல்வரே எழுந்து கண்டனம் தெரிவித்ததால் இவர்களது கூட்டணி எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை.

திமுகவைப் பொறுத்தவரை எப்போதுமே கையில் சில ஆப்ஷன்களை வைத்திருப்பது வழக்கம். அதனால் தான் அகில இந்திய அளவில் டெக்னிக்கலாக சிறந்த கட்சியாக எப்போதுமே திமுக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் வருகிற தேர்தலையும் சமாளிக்கத் தக்க வகையில் பல்வேறு வாய்ப்புகளை அது பரிசீலித்து வருகிறதாம். தற்போதைய கூட்டணி தொடரும் என்ற நம்பிக்கை திமுகவுக்கு உள்ளது. கூடுதல் சீட் என்பது ஒரு பிரச்சினையே கிடையாது. எப்போதுமே இருந்து வரும் default பிரச்சினை தான். அதை எல்லாக் கட்சிகளுமே ஏதாவது செய்து சரிக்கட்டி விடுவார்கள். கொள்கை ரீதியாகவோ அல்லது இணக்கமான சூழல் ஏற்படாமல் போனால் தான் கூட்டணிகள் முடிவுக்கு வரும்.

மேலும் படிக்க: முதலீட்டோடு இணைந்த ஆயுள் காப்பீட்டு திட்டம் - எக்கச்சக்க லாபம் தரும் AEA திட்டம் பற்றி தெரியுமா?

சரி இப்போது திமுக கதைக்கு வருவோம். திமுக கூட்டணியில் இணைய சில கட்சிகள் ஆர்வமாக உள்ளன. குறிப்பாக பாமக தரப்பில் சில தலைவர்களுக்கு திமுக அல்லது அதிமுக கூட்டணிக்கு மாற வேண்டும் என்ற ஆர்வம் உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் நீடித்தால் நமது நிலைமை மேலும் மோசமாகும் என்பது அவர்களது கருத்தாக உள்ளது. திமுக அல்லது அதிமுக கூட்டணிக்கு மாறினால் சில சீட்களில் வெல்ல முடியும் அல்லது இப்போது இருக்கிற சீட்களையாவது தக்க வைக்க முடியும் என்பது அவர்களது கருத்தாக உள்ளது.

மறுபக்கம் தேமுதிக கடும் அதிருப்தியில் உள்ளதாம். கையில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை. ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாத நிலையே நீண்ட காலமாக நிலவுகிறது. ராஜ்யசபா சீட்டை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கேப்டன் இருந்த காலத்தில் நமது நிலைமை எப்படி இருந்தது. இப்போது இப்படியாகி விட்டதே என்ற விரக்தியில் அந்தக் கட்சி உள்ளதாம். வட மாவட்டங்களிலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் தேமுதிகவுக்கு ஓரளவு வாக்கு வங்கி உள்ளது. இன்னும் முழுமையாக அது கரைந்து போய் விடவில்லை. எனவே வலுவான கூட்டணிக்கு மாறும் யோசனையில் தேமுதிக உள்ளதாம்.

அதிமுகவிடம் ராஜ்யசபா சீட் கேட்டும் கூட உறுதியான பதிலை அது தராமல் போனது தேமுதிகவுக்கு பெரும் வருத்தமாம். இதனால் தேமுதிகவின் பார்வை தற்போது திமுக பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. திமுகவுக்கும் கூட தேமுதிக மீது ஒரு கண் இருப்பதாக சொல்கிறார்கள். தற்போது அரசு மீது நிலவும் பல்வேறு வகையான அதிருப்திகள், விஜய் வரவு, வலுவடைந்து வரும் சீமான், பாஜகவின் தீவிரம் என பல முக்கிய அம்சங்களை கூட்டிக் கழித்துப் பார்த்தால் இருக்கிற வாக்கு வங்கி மட்டுமல்லாமல் கிடைக்கும் வாக்கு வங்கிகளையும் கூட விடக் கூடாது என்ற நிலையில் திமுக உள்ளது.

மேலும் படிக்க: அரசு போக்குவரத்து கழகங்களில் 3274 ஓட்டுநர் நடத்துனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

அந்த வகையில் தேமுதிகவை கூட்டணியில் சேர்த்தால் அதுவும் நமக்கு ஏதாவது ஆதாயம் தருமே என்பது திமுகவின் எண்ணம் என்று சொல்கிறார்கள். இருப்பினும் தேமுதிகவை உள்ளே கொண்டு வந்தால் அவர்களுக்கு எந்த அளவுக்கு சீட் தர முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏற்கனவே கூட்டணியில் அதிக அளவிலான கட்சிகள் இருப்பதால், அவர்களுக்கும் சீட் தர வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இருந்தாலும் தேவைப்பட்டால் தேமுதிகவையும் உள்ளே இழுக்க திமுக தயங்காது என்று கள நிலவரங்கள் சொல்கின்றன.

தேமுதிக மீது திடீரென திமுகவுக்கு அபிப்பிராயம் வர காரணமே விஜய்தான் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு வேளை தேமுதிக - அதிமுக - விஜய் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து விட்டால் நமது நிலைமை சிக்கலாகி விடும் என்று திமுக தரப்பு யோசிக்கிறதாம். எனவே தான் தேமுதிகவை துண்டாக தூக்கிக் கொண்டு வந்து விடலாமா என்ற யோசனையில் திமுக இருப்பதாக சொல்கிறார்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com