"ஆல் ஏரியாலையும் நாம்தான்" - 175 இடங்களில் திமுக போட்டிடுவதாக அறிவிப்பு!

தலைவர்களுடனும் ஆலோசித்தே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, ஒப்பந்தங்கள் நிறைவேற்றியுள்ளன...
"ஆல் ஏரியாலையும் நாம்தான்" - 175 இடங்களில் திமுக போட்டிடுவதாக அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 175 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தோழமை கட்சிகளுடன் சேர்ந்து நின்று 'கவனம் சிதறாது, இலக்கை வெல்வோம்' என்று ஸ்டாலின் அறிக்கை 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான 'மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி' கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது. திமுகவின் 'உதயசூரியன்' சின்னம் மொத்தம் 175 தொகுதிகளில் களம் காண்பது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ், விசிக மற்றும் தேமுதிக ஆகிய கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தி, பெரும்பான்மையான இடங்களை திமுக தக்கவைத்துள்ளது.

திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளான விசிகவுக்கு 8 இடங்கள், தேமுதிகவுக்கு 10 இடங்கள், காங்கிரஸ் 28 இடங்கள், கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் எனத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் திமுக 175 இடங்களில் 'உதயசூரியன்' களம் காண இருக்கிறது. இந்நிலையில் தனது X தளத்தில் ஸ்டாலின், கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ள காரணத்தால், உரிய அளவில் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டிய சூழலும் தேவையும் இருப்பதை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் அனைத்து இயக்கங்களின் தலைவர்களுடனும் ஆலோசித்தே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, ஒப்பந்தங்கள் நிறைவேற்றியுள்ளன.

அவர்கள் எதிர்பார்க்கின்ற எண்ணிக்கையில் உள்ள நியாயத்தை மதித்து, மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெறுவதற்கேற்ப எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டிய சூழல் இருப்பதையும் அவர்களிடம் விளக்கமாக சொன்னேன். கூட்டணி தலைவர் என்ற முறையில் தோழமைக் கட்சிகளை நம்முடைய அங்கமாகத்தான் பார்க்கிறேன். அவர்களுடைய தொகுதிகளில் முழுமையான வெற்றியை உறுதி செய்ய அவர்களின் சகோதரனாக என் உத்தரவாதத்தையும் வழங்குகிறேன். என்று கூறியிருந்தார்.

மேலும் அவர், கழகத்தின் நேர்காணல் என்பது தலைமைக்கும் தொண்டர்களுக்குமான உறவின் வெளிப்பாடு. அதுவும் இந்த முறை 16 ஆயிரத்து 500 உடன்பிறப்புகள் கலந்துகொண்ட கொள்கை உறவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டத்தைப்போல ஒவ்வொரு நாளும் 10 மணிநேரத்திற்கு குறையாமல் நேர்காணல் நடைபெற்றது என்று கூறியிருந்தார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில், 175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது என்றும், உதயசூரியனும் நமது சின்னம்தான், கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தி நட்சத்திரம், பானை, ஏணி ஆகியவையும் நமது சின்னங்கள்தான். 234 தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள்தான் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். 'திராவிட மாடல்' 2.0விலும் தோழமை தொடர்வோம்! களத்தினில் ஒன்றாக வெல்வோம்!, என்று தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com