“சூப்பர் ஸ்டாராக களமிறங்கும் திமுக வாக்குறுதிகள்” - இனி மகளிர் உரிமை தொகை 2000… இல்லத்தரசிகளுக்கு மீண்டும் மகிழ்ச்சி நியூஸ் கொடுத்த முதலமைச்சர்!

உயர்கல்வி முடித்த இளைஞர்கள் நான் முதல்வன் திட்டத்தில் ஊக்கத்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும்....
dmk
dmk
Published on
Updated on
2 min read

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு 70 தொகுதிகளை ஒதுக்கிய திமுக 164 தொகுதிகளில் நேரடியாக களமிறங்குகிறது. இந்த 164 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை பட்டியலை நேற்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்ட முதலமைச்சர் இன்று திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடுவதாக தெரிவித்தார். கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்ட இந்த தேர்தல் அறிக்கை குழுவில் நிர்வாகிகள், அமைச்சர்கள், துறைசார் நிபுணர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த குழு பொதுமக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் இருந்து கருத்துகளை சேகரிக்கும் வகையில் பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டு நடைமுறைக்கு ஏற்ற வாக்குறுதிகளை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சில முக்கிய வாக்குறுதிகளை மட்டும் முதலமைச்சர் தற்போது வெளியிட்டுள்ளார்.

திமுகவின் முக்கிய வாக்குறுதிகள் :

  • முதலமைச்சரின் காலை உணவு திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.

  • மகளிர் உரிமை தொகை திட்டம் 2000 வரை உயர்த்தப்படும்.

  • இலவச மின்சாரம் பெற்று வரும் விவசாயிகளுக்கு மீட்டர் இல்லாத நவீன நீர் பாசன வசதிகள்.

  • முதலமைச்சர் காப்பீடு உரிமை தோட்டத்தில் சேர்வதற்கான ஆண்டு வருமானம் 5 லட்சமாக மாற்றப்பட்டு காப்பீடு தொகை 10 லட்சமாக மாற்றப்படும்.

  • பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்படும்.

  • முதியோர் உதவித்தொகை 1,200 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்படும்.

  • மாற்றுத்திறனாளி உதவித்தொகை 2500 ரூபாயாக உயர்த்தப்படும்.

  • அன்னைத் தமிழை போற்ற பன்னாட்டு அறிஞ்சர்களை வைத்து செமொழி மாநாடு சென்னையில் நடத்தப்படும்.

  • சுய உதவி குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் பெண்களுக்கு தொழில் தொடங்க பிணைப்பு இல்ல கடன் வழங்கப்படும்.

  • அரசு அமைப்புகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் கால தாமதம் இன்றி நிரப்பப்படும்.

  • உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

  • உயர்கல்வி முடித்த இளைஞர்கள் நான் முதல்வன் திட்டத்தில் ஊக்கத்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும்.

  • 18 லட்சம் கோடி அந்நிய முதலீடுகள் விற்கப்பட்டு அதன் மூலம் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

  • நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 3,500 ரூபாய் உயர்த்தப்படும்.

  • தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி இரண்டு மடங்காக உயர்த்தப்படும்.

  • அனைத்து மாவட்டங்களிலும் உணவு மற்றும் தங்கும் வசதிகளுடன் விளையாட்டு விடுதிகள் அமைக்கப்படும்.

  • கிராம சாலை திட்டத்தில் கீழ் சாலைகள் சரி செய்யப்படும்.

  • 50 புதிய செம்மொழி பூங்காக்கள் அமைக்கப்படும்.

  • பத்தாயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்படும்.

  • மொழி போராட்ட வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிய நவீன வசதிகளுடன் பொள்ளாச்சியில் நூலகம் அமைக்கப்படும்.

  • மிகவும் வறுமையில் வாடும் நலிவடைந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வீட்டு வசதி, சமூகப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், திறன் மேம்பாடு, வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கிடைக்க தாயுமானவர் திட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

  • ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்படும்.

  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் பள்ளி இடம் நிறுத்தம் இல்லா நிலை அடைய நடவடிக்கை எடுக்கப்படும்.

  • நிகர சாகுபடி பரப்பு 50 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்.

  • பத்திரிகையாளர்களின் குழந்தைகளின் கல்விக்கு வழக்கும் உதவி தொகை இரு மடங்காக உயர்த்தப்படும்.

  • பல்வேறு துறைகளில் சிறப்புறப் பணியாற்றிடும் திருநர் - திருநங்கையருக்கு விருது வழங்கப்படும்.

  • பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் தொழில் தொடங்க, TABCEDCO மூலம் கடன் பெறும் உச்சவரம்பு 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

  • தமிழ்நாட்டில் 10 கைத்தறிவு பூங்கா அமைக்கப்படும்.

  • மீனவர்கள் தங்களின் வருவாயை பெருக்குவதற்கான தேவையான நவீன உள் கண்ட அமைப்பு வசதிகள் மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்களில் ஏற்படுத்தி தரப்படும்.

  • தமிழ்நாட்டின் MSME நிறுவனப் பொருள்கள் உலக அளவில் சந்தைப்படுத்த மெய்நிகர் வணிகத் தளம் உருவாக்கப்படும்.

  • கிராமப்புறங்களின் ஆதாரங்களைக் கொண்டு, ஊரகப்பகுதிகளில் 5000 புத்தொழில்கள் தொடங்கப்படும்.

  • மகளிரை மகிழ்விக்க இல்லத்தரசிகள் 8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பனை பயன்படுத்தி வாஷிங் மெஷின் டிவி பிரிட்ஜ் மிக்ஸி மைக்ரோ ஓவ் ஓவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வருமான வரி செலுத்தாத குடும்பங்களை சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக் கொள்ளலாம் அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு மாற்றாக பெற்றுக் கொள்ளலாம்.

  • டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சி திட்டம்

  • தென் மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சி திட்டம் ஆகியவை 20,000 கோடி மதிப்பீட்டில் செய்யப்படும்.

வாக்குறுதிகளை தெரிவித்து விட்டு பேசிய முதலமைச்சர் “தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுகவின் வாக்குறுதிகள் தான் ஹீரோ இந்த முறை சூப்பர் ஸ்டாராக களமிறங்கியுள்ளது. திராவிட மாடல் டூ பாயிண்ட் ஓ வில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி வெல்வோம் ஒன்றாக” என தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com