காவிரி விவகாரத்தில் ஆளும் திமுக அரசு தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்டுவதில் தோல்வியடைந்து விட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை ஓட்டேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மகளிர் உரிமைக்காக மாநாடு போடும் திமுக, கனிமொழியை கட்சியின் தலைவராக்குமா என வினவினார்.
இதையும் படிக்க : தஞ்சாவூரில் களைகட்டிய ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி...!
மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக சாடிய ஜெயக்குமார்,
நெல்லிக்காய் மூட்டை மாதிரி திமுக கூட்டணி கட்சிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வைத்திருப்பதாகவும் விமர்சித்தார்.