கொடநாடு கொலை வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே குற்றவாளிகளுக்கு ஆதரவாக திமுக உள்ளது: இபிஎஸ் குற்றச்சாட்டு...

கொடநாடு கொலை வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே குற்றவாளிகளுக்கு ஆதரவாக திமுக உள்ளது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
கொடநாடு கொலை வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே குற்றவாளிகளுக்கு ஆதரவாக திமுக உள்ளது: இபிஎஸ் குற்றச்சாட்டு...
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் இன்று கருப்பு பட்டை அணிந்து வந்தனர்.  சட்டப்பேரவை தொடங்கியதும் அவர்கள் கோடநாடு விவகாரம் தொடர்பாக, அரசு பொய் வழக்குப் போடுவதாகக் கூறி அமளியில் ஈடுபட்டனர். பொய் வழக்குப் போடும் திமுக அரசை கண்டிக்கிறோம் என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். 

அதிமுகவுக்கு ஆதரவாக, பாமக, பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்த அவர்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கத்தின் வெளியே  எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தரையில் அமர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்கட்சி தலைவர் மற்றும் எதிர்கட்சி துணை தலைவர், தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்ததாக ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டினார். ஜனநாயகத்தில் தனது அதிராக பலத்தால் எதிர்கட்சிகளை ஒடுக்க நினைப்பதாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு கவனம் செலுத்தவில்லை என்றார். மக்களை திசை திருப்பும் நடவடிக்கையாக பொய் வழக்கு எனும் ஆயுதத்தை திமுக அரசு கையில் எடுத்தி இருப்பதாகவும் ஓ.பி.எஸ் கண்டனம் தெரிவித்தார். மேலும் திமுக அரசை கண்டித்து இன்றும் நாளை சட்டபேரவையை புறகணிக்க உள்ளதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொடநாடு கொலை வழக்கில் ரகசிய வாக்குமூலத்தில் எனது பெயரை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் மேலும் சில அதிமுக நிர்வாகிகள் பெயரை சேர்க்க திமுக அரசு  முயற்சி செய்து வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டினார். கொடநாடு கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரர்களாக இருந்தவர்கள் திமுகவினர் என்றார், கொடநாடு வழக்கில் மறு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறிய பழனிசாமி, கொடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்காக திமுக வழக்கறிஞரான  என்.ஆர்.இளங்கோ ஆஜரானார். கொடநாடு வழக்கில் குற்றவாளிகளும் அரசு வழக்கறிஞர்களும் இணைந்து செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com