"நீட் தேர்வை வைத்து அரசியல் செய்கிறது திமுக" - அண்ணாமலை

"நீட் தேர்வை வைத்து அரசியல் செய்கிறது திமுக" - அண்ணாமலை
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது 17-வது நாள் நடைபயணத்தை தொடங்கினார். அப்போது, நீட் தேர்வு என்பது திமுகவினருக்கு மட்டும் தான் எதிரி என்பதால், அதனை வைத்து அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார். 

தமிழகத்தில்  என் மண் என் மக்கள் என்ற வாசகத்துடன் பாஜக தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை நடத்தி வரும் நிலையில்  17 வது நாளான இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பாத யாத்திரையை துவங்கினர்.

மாவட்டத்தில் மூன்று நாட்கள் பாத யாத்திரை யை நடத்த திட்ட மிட்டுள்ள நிலையில் முதல் நாளான இன்று தமிழக - கேரள எல்கையான களியக்காவிளை சந்திப்பில் சுதந்திர தினத்தை ஒட்டி  தேசியக் கொடியை ஏற்றி வைத்து பாத யாத்திரை துவங்கினர்,

இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் தேசிய கொடியை ஏந்திய வாறு பாத யாத்திரையில் கலந்து கொண்டனர்,இன்று காலை களியாக்கவிளை சந்திப்பில் இருந்து குழித்துறை சந்திப்பு வரையிலும் ,மாலை வெட்டு வெண்ணி பகுதியில் இருந்து இரவி புதூர்கடை வரையிலும் நடைபெற உள்ள நிலையில் அடுத்ததாக 17 மற்றும் 18 ம் தேதியும் மாவட்டத்தில் நடைபெறுகிறது,அண்ணாமலையின் பாத யாத்திரையை தொடர்ந்து ஆயிரக்கணக்கான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்;  நீட் தேர்வு என்பது திமுகவினருக்கு மட்டும் தான் எதிரி என்பதால், அதனை வைத்து அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com