"காவிரி விவகாரத்தில் திமுக தவறு செய்கிறது" - புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

Published on
Updated on
1 min read

அரசு பள்ளியின் தரம் குறைவாக உள்ளதற்கு ஆசிரியர்களை சரியாக நிரப்பாதது தான் காரணம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “தமிழகத்தில் பூர்ண மதுவிலக்கை ஒழிக்கு போராட்டங்களை நடத்தி வருவதாகவும்,  371 ஊராட்சிகளில் டாஸ்மார்க் கடைகளை  நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், திமுக பல்வேறு வகையான வாக்குறுதிகளை கொடுத்டிருந்தாலும் அவற்றில் ஒரு சில வாக்குறுதிகளை தவிர மற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

அந்த வகையில்  ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை  உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

அதனைத்தொடர்ந்து,   ”மக்களை  சாதி ரீதியாக தான் பிரிக்க வேண்டும் என்றால் அது ஏற்புடையது இல்லை எனவும்,  அரசு வேலையில் குறைவான அளவில் மட்டுமே வேலை கிடைக்கிறது என்றும்,  இடஒதுக்கீட்டால் இளைஞர்களுக்கு தேவையான வேலையை கொடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.  அரசு பள்ளியின் தரம் குறைவாக உள்ளதற்கு காரணம்,  ஆசிரியர்களை சரியாக நிரப்பாததுதான்”,  என குற்றம் சாட்டினார்.

அதிமுக பாஜக கூட்டணி குறித்து என்னுடைய நிலைப்பாடு   என்பது காத்திருந்தால் நல்ல முடிவு கூட வரலாம் என்பது தான் எனக் கூறியவர்,  கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து திமுகவை வீழ்த்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, “எனக்கு கிடைத்த தகவல்படி பாஜக மேலிடம் 5 மாநில தேர்தலுக்கு பிறகு கூட மீண்டும் அதிமுகவை கூட்டணியில் சேர்க்கலாம் ; இது நடக்கலாம் அல்லது, நடக்கமாலும் போகலாம்” எனவும் கூறினார்.

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி குறித்த கேள்விக்கு:
“நிலையற்ற தன்மை நிகழ்கிறது. திமுகவை 40 க்கு 40 நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்தி , மாவட்ட செயலாளர்களை பதவி நீக்க செய்ய வேண்டும் என்பது எனது எண்ணம்”, என்றார்.

மேலும்,  “காவிரி விவகாரத்தில் திமுக செய்வது மிகவும் தவறு, தற்போது அவர்கள் எதிர்கட்சியாக இருந்து வேறு ஏதேனும் கட்சி ஆட்சியில் இருந்தால் இப்படி தான் இருப்பார்களா ? எனக் கேள்வி எழுப்பியதோடு, தன்னுடைய கட்சியின் நலன்,தன் குடும்பத்தின் நலனுக்காக நாட்டு மக்களின் நலனை  கெடுப்பது நியாமனது அல்ல”,என அவர் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com