வைரலான காணொளி...திமுக வீண் விளம்பரத்திற்காக சமூகநீதி பேசி வருகிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு!

வைரலான காணொளி...திமுக வீண் விளம்பரத்திற்காக சமூகநீதி பேசி வருகிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Published on
Updated on
1 min read

அதிகார மமதையில், அட்டவணை பிரிவை சேர்ந்த மக்களுக்கு எதிராக திமுகவினர் வன்முறை நடத்தி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் குறிச்சி பகுதியில், திமுக ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் தீபலட்சுமி என்பவரின் கணவர் சுவாமிநாதன், பழங்குடியின பெண் ஒருவரை காலணியால் அடிக்கும் காணொளி ஒன்று சமூகவலை தளங்களில் வைரலானது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில் பழங்குடியின பெண் காலணியால் அடி வாங்கும் வீடியோவை பகிர்ந்து, திமுகவினர் வீண் விளம்பரத்திற்காக, பொய்களும் புரட்டுகளுமாய், போலி சமூகநீதி பேசிக்கொண்டு, அதிகார மமதையில், பட்டியல், பழங்குடியினர் சமூக மக்களுக்கு எதிராக திமுகவினர் நடத்தி வரும் வன்முறையின் நீட்சியே இது போன்ற தாக்குதல்கள் என்றும், இது போன்ற வருந்தத்தக்க நிகழ்வுகள் மீண்டும் நடக்காத வண்ணம் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com