தமிழர்கள் எங்கிருந்தாலும் பரவாயில்லை.. திமுக காப்பற்றும்.. உறுதியாக சொன்ன முதல்வர் ஸ்டாலின்

தமிழர்கள் எங்கிருந்தாலும் காப்பாற்றக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் எங்கிருந்தாலும் பரவாயில்லை.. திமுக காப்பற்றும்.. உறுதியாக சொன்ன முதல்வர் ஸ்டாலின்
Published on: 
Updated on: 
1 min read

சென்னையில் நடைபெற்ற நாதஸ்வரக் கலைஞர் திரு. டி.என். ராஜரத்தினம் குடும்ப திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், தமிழ் என்றால் நமக்குத் தானாக ஒரு உத்வேகம் வந்துவிடுவதாக தெரிவித்தார்.

உள்ளூர் தமிழனாக இருந்தாலும், உக்ரைனில் இருக்கும் தமிழனாக இருந்தாலும் அவர்களையும் காப்பாற்றுகிற இயக்கம் திமுக இயக்கம் என பெருமிதத்துடன் கூறிய முதலமைச்சர், உக்ரைனில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2000 பேர் சிக்கியிருக்கிறார்கள் என்ற செய்தியை அறிந்ததும், நாட்டிலேயே எந்த மாநிலமும் முன்வராத நிலையில் முதன்முதலில் தமிழகத்தில்தான் ஒரு குழு அமைத்து, தமிழர்கள் அனைவரையும் மீட்டு அழைத்து வந்துள்ளதாக தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com