

சற்று நேரத்தில் கூடவிருக்கும் 17வது சட்டமன்ற கூட்டத்திற்கு திமுக MLAக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வருகை தந்துள்ளனர். மேலும், திமுகவினர் சார்பாக கையில் பதாகைகளுடன் வருகை தந்துள்ளனர்.
இன்று 10 மணிக்கு கூடவிற்கும் 17வது சட்டமன்ற கூட்டத்தொடருக்கு திமுகவினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வருகை தந்துள்ளதுடன் கையில் 'வாயை திறங்க CM சார்!" என்ற பேட்ஜை குத்தி வந்துள்ளனர். மேலும், கையில், "கதறல் கேட்குதா CM சார்?" உள்ளிட்ட பதாகைகளுடன் வருகை தந்துள்ளனர். புதிய தமிழக வெற்றிக் கழக கட்சி ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்ததால் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதனை கேள்வி கேட்கும் விதமாகவும், சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு பதிலளிக்க வேண்டியும் திமுகவினர் இவ்வாறு வருகை தந்துள்ளனர். மேலும், கையில் பதாகைகளுடன் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக "Reels இங்கே Real எங்கே?", திரையில் நாயகன் தரையில் வில்லன்", "வாயில் ஏதாவது வருமா CM சார்?", "தற்குறி ஆட்சி, தமிழ்நாடே சாட்சி" உள்ளிட்ட வாசங்கங்கள் அந்த பதாகைகளில் இடம்பெற்றுள்ளன.
மேலும், தவெக ஆட்சியமைத்து முதல்முறை கூடவிருக்கும் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் அர்லாகர் உரை வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த ஆடுகளில் ஆளுநர் முழுமையாக உறைவாசிக்காத நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் ஆளுநர் உரை வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த முறை முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படுமா? என்ற கேள்வியும் பல்வேறு தரப்புகளில் எழுந்துள்ளது. இந்த முறை எதிர்க்கட்சியாக களமிறங்கவுள்ள திமுக பல்வேறு கேள்விகளை கேட்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.