புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்ற கனிமொழியின் சிறிய வயது புகைப்படம்...!

புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்ற கனிமொழியின் சிறிய வயது புகைப்படம்...!
Published on
Updated on
1 min read

அரியவகை புகைப்படங்களை பார்க்கக்கூடிய வாய்ப்பு இந்தப் புகைப்பட கண்காட்சியில் இடம் பெற்றிருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.


சென்னை கிரீன் சாலையில் உள்ள லலித்கலா அகாடமியில் தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 10 ஆம் தேதி புகைப்பட கண்காட்சி  துவங்கப்பட்டது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்தார். 

ஒரு வார காலம் நடைபெறவுள்ள இந்த புகைப்பட கண்காட்சியில் இயற்கை சீற்றங்கள், தமிழக அரசியல் நிகழ்வுகளில், பேரிடர்கள், செய்தி சேகரிப்பின் போது எடுக்கப்பட்ட முக்கிய சம்பவங்கள் போன்ற 260 புகைப்படங்களை அனைவரையும்  ரசிக்கும் வகையில்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த புகைப்பட கண்காட்சியை தமிழக அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரும் வருகை தந்து பார்வையிட்டு சென்ற நிலையில், இன்று திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் வந்து அனைத்து புகைப்படங்களையும் பார்வையிட்டார். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நிகழ்கால சரித்திரத்தின் மிக முக்கியமான பகுதியாக இந்த கண்காட்சியை பார்ப்பதாகவும், மிக முக்கியமான நிகழ்வுகள், மிக அரிய வகை புகைப்படங்களை இந்த புகைப்பட கண்காட்சியின் மூலம் பார்க்கக்கூடிய  வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சி என்றும் தெரிவித்த அவர், பல நினைவுகளை நினைவுக்கு கொண்டு வரும் அளவில் புகைப்படங்கள் அனைத்தும் இருந்ததாக தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், மற்ற புகைப்பட கலைஞர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பொழுது அதனை சரிபார்த்து எடுக்க நேரம் இருக்கும். ஆனால், செய்தி புகைப்பட கலைஞர்களுக்கு இதற்கான நேரம் இல்லாமல் நடைபெறக்கூடிய நிகழ்வுகளில் புகைப்படமாக எடுப்பார்கள், அந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்பொழுது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சி இடம் பெற்றுள்ள அனைத்து புகைப்படத்தின் கலைஞர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார்.

உங்களுடைய சிறிய வயது புகைப்படம் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது அதை பார்க்கும் பொழுது என்ன ஞாபகம் வந்தது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அந்தப் புகைப்படம் தன்னிடம் கூட இல்லை எனவும், அதை பார்ப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com