"ஸ்டாலின் உடல்நிலை சரியில்லை" - திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு.. துரைமுருகன் விளக்கம்!

திமுகவில் பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கிய நாள் ஆகிய மூன்று முக்கிய தினங்களை ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.
"ஸ்டாலின் உடல்நிலை சரியில்லை" - திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு.. துரைமுருகன் விளக்கம்!
"ஸ்டாலின் உடல்நிலை சரியில்லை" - திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு.. துரைமுருகன் விளக்கம்!
Published on
Updated on
1 min read

சென்னையில் இன்று நடக்கவிருந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில், "தலைவருக்கு (ஸ்டாலின்) வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, உடல்நிலை சரியில்லை. அதனால் இந்த நிகழ்ச்சிக்கு வர முடிய வில்லை.

இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியும் (முப்பெரும் விழா) ஒத்துழைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்." என அறிவித்தார் அவர்.

திமுகவில் பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கிய நாள் ஆகிய மூன்று முக்கிய தினங்களை ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.

கடந்த ஆண்டு கரூரில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது முப்பெரும் விழா. இந்த விழாவில் தந்தை பெரியார் விருது, அறிஞர் அண்ணா விருது, கலைஞர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது ஆகிய விருதுகள் வழங்கப்படும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com