தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அலங்காரத்திற்காக கட்டப்பட்ட வாழைத்தாரை தொண்டர்கள் போட்டி போட்டு கொண்டு அறுத்து சென்றனர்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் திமுக சார்பில் தர்மபுரி மாவட்ட இளைஞரணிக்கான செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுக இளைஞரணி செயலாளர் விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பொதுமைக்குளுடன் பேசியுள்ளார்.
அப்போது ஏராளமான திமுகவினர் மற்றும் இளைஞர் அணி பொறுப்பாளர்கள் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிவதற்கு முன்பாகவே ஆங்காங்கே வாழை மரங்களை கட்டிய இடத்தில் காத்திருந்த கட்சித் தொண்டர்கள் வாழை மரத்தில் இருந்த வாழைத்தார்களை அறுத்து எடுத்து செல்ல முற்பட்டனர்.
இதைப் பார்த்த காவல்துறையினர், கூட்டம் முடிவடைவதற்கு முன்பாகவே வாழைத்தார்கள் எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி பின்பு வாழைத்தாருக்கும் சேர்த்து காவல் துறையினர் பாதுகாப்பு அளித்தனர்.
பின்பு கூட்டம் நிறைவடைந்து உதயநிதி ஸ்டாலின் புறப்பட்டுச் சென்ற உடனே வாழத்தார்களுக்கு பாதுகாப்பளித்த தொண்டர்கள், ஒருவருக்கொருவர் முந்தியடித்துக்கொண்டு உருண்டு பிரண்டு வாழத்தார்களை எடுத்துச் சென்றனர். இதனால் கட்சி தொண்டர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.