நாகையில் விஜய்க்கு "செக்" வைத்த திமுக.. அடுத்த சனிக்கிழமைக்கு.. விஜய்யின் பரப்புரைக்கு அனுமதி மறுத்த போலீஸ்!?

விஜய் கட்சி, நாகப்பட்டினம் அவுரித்திடல் பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தது. ஆனால்...
vijay vs dmk
vijay vs dmk
Published on
Updated on
1 min read

'தமிழக வெற்றிக் கழகம்' தலைவர் விஜய், தனது அடுத்தகட்ட மக்கள் சந்திப்பு பயணத்தை வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 20) நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், இந்த முயற்சிக்கு நாகப்பட்டினம் காவல்துறை இன்று அனுமதி மறுத்துள்ளது.

விஜய் கட்சி, நாகப்பட்டினம் அவுரித்திடல் பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தது. ஆனால், காவல்துறை அந்த இடம் ஏற்கனவே திமுக-வினரால் ஒரு நிகழ்ச்சிக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று கூறி அனுமதி மறுத்துள்ளது. மற்ற இடங்களிலும், 'போதிய பாதுகாப்பு வசதி இல்லை' என்ற காரணத்தைக் கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது வெறும் நிர்வாக ரீதியான நடவடிக்கை அல்ல, மாறாக ஒரு திட்டமிட்ட அரசியல் நகர்வு என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். திருச்சியில் விஜய்க்கு கிடைத்த வரவேற்பு, திமுக தலைமையையும், ஆட்சியாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கட்டுக்கடங்காத கூட்டம், காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி நடந்த 'ரோடு ஷோ', மற்றும் முதல்வரின் 'புதிய எதிரி' என்ற மறைமுகமான விமர்சனம் ஆகியவை, விஜய்யின் அரசியல் வருகையை புறம் தள்ளமுடியாத நிலைக்கு திமுகவை இட்டுச் சென்றுள்ளது.

இந்த சூழலில், நாகையில் அவரது அரசியல் என்ட்ரிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் இன்று திரண்ட ரசிகர்கள் கூட்டத்தால். எதிர்காலத்தில், அவர் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி பெறுவது ஒரு போராட்டமாக அமையலாம்.

இதுகுறித்து நாகப்பட்டினம் எஸ்.பி கூறுகையில் “விஜய் -ன் மக்கள் பிரச்சாரத்திற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறோம்” என கூறியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com