திமுக என்றாலே அது கருணாநிதியின் குடும்பகட்சி - ஈபிஎஸ் விமர்சனம்!

திமுக என்றாலே அது  கருணாநிதியின் குடும்பகட்சி - ஈபிஎஸ் விமர்சனம்!
Published on
Updated on
1 min read

திமுக என்றால் அது கருணாநிதியின் குடும்ப கட்சி என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கோவைக்கு சென்ற அவருக்கு வழிநெடுகிலும் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய அவர், இந்தியாவிலேயே ஜனநாயக அமைப்பு உள்ள கட்சி அதிமுக என்று பெருமையாக கூறியவர், திமுக என்றால் அது கருணாநிதியின் குடும்ப கட்சி என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி ஆட்சிக்கு வந்த திமுக, சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணங்களை உயர்த்தி  மக்களை வஞ்சித்து விட்டதாக குற்றம்சாட்டினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com