இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவளிக்கிறதா திமுக?.. சீமானின் பதிலால் சலசலக்கும் அரசியல் வட்டாரம்! "TVK-வா.. NTK-வா?"

விஜய்க்கு இருக்கின்ற பின்புலம் கூட எனக்கு இல்லை. தம்பி திரையில் இருந்து வந்தார். நான் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்து வந்து கட்சி ஆரம்பித்தேன்.
Seeman latest speech
Seeman latest speech
Published on: 
Updated on: 
2 min read

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதையை செலுத்தினார். மரியாதையை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் முத்துராமலிங்க தேவரை புகழ்ந்து பேசினார். பின்னர், "சட்டமன்றத்தில் தனது குரல் ஒழிக்கப்படவேண்டும்" என்று பலர் விருப்பம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து, அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் திமுக ஆதரவு தருமா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சீமான் அளித்த பதில் அனைவரது கவனத்தையும் அரசியல் வட்டாரத்தில் ஈர்த்துள்ளது.

இன்று, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தியை முன்னிட்டு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்த இராமநாதபுரம் பசும்பொன்னிற்கு சென்றார். மரியாதை செலுத்திய பின்னர், சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பற்றி புகழ்ந்து பேசினார். அதன் பின்னர், செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகளை எழுப்பினர். அதில், "அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் திமுக ஆதரவு தருமா?" என்று ஒரு பத்திரிகையாளர் கேள்வியினை எழுப்பினார். அதற்கு சீமான், "பசியோடு இருப்பவனுக்கு பிரியாணி கொடுக்கிறீர்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

அதை வேண்டாம் என்று கூற நாங்கள் பைத்தியக்காரர்கள் இல்லையே?. விமர்சனம் என்பது அரசியல் நிலைப்பாடு, தனிப்பட்ட முறையில் ஐயா ஸ்டாலினையோ, ஐயா எடப்பாடியையோ, தம்பி விஜய்யையோ விமர்சிக்கிறேனா என்று பார்க்கவேண்டும். அரசியல் கொள்கை நிலைப்பாடு வேறு. நான் ஒரு லட்சியவாதி. உங்களுக்கே தெரியும் நாங்கள் 'அரசியல்வாதிகள் அல்ல புரட்சியவாதிகள்'. நான் ஒரு எளிய மகன். மற்றவர்களுக்கு இருக்கின்ற.. விஜய்க்கு இருக்கின்ற பின்புலம் கூட எனக்கு இல்லை. தம்பி திரையில் இருந்து வந்தார். நான் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்து வந்து கட்சி ஆரம்பித்தேன்.

அரை விழுக்காடு, ஒரு விழுக்காடு, இரண்டு விழுக்காடு இருப்பவர்களுக்கெல்லாம் கூட்டணிக்காக சீட்டும், நோட்டும் பேசப்பட்டது என்றால் 36 லட்சம் வாக்குகளை வைத்து எட்டரை விழுக்காடு வாக்குகள் கொண்ட என்னிடம் பேசிருப்பார்களா? இல்லையா?. எத்தனை கோடிகள் பேசியிருப்பார்கள்.. எத்தனை சீட்டு, நோட்டுகள் பேசியிருப்பார்கள். நான் ஏன் சமரசம் செய்யவில்லை?. அப்போது எனக்கு ஒரு நோக்கம் இருக்கிறதல்லவா?. எனக்கு ஒரு கனவிருக்கிறது. அந்த கனவை வெல்லவேண்டுமென்றால் நான் தனித்து நின்றால்தான் முடியும். திருச்சி கிழக்கில் எப்படி தனித்து நின்று போட்டியிட்டோமோ அதுபோலத்தான் இன்று தவெக-வா.. நாதக-வா?. அவர்கள் ஹீரோ கட்சி என்கிறார்கள் நங்கள் ஜீரோ கட்சி என்கிறோம். அண்ணனா.. தம்பியா? தெரிந்துவிடப்போகிறது" என்று அவர் பத்திரிகையார்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும், "இடைத்தேர்தலின்போது முடிவு செய்யப்படும் என்று ஸ்டாலின் கூறியதைத்தான் நானும் கூறுகிறேன்" என்று சீமான் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும்பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும், இடைத்தேர்தல் தேதி அறிவித்த பின்னர் முடிவு செய்யப்படும் என்று ஸ்டாலின் கூறுவதும், தவெகவா..? நாதகவா? என்று சீமான் குறிப்பிடுவதும் தற்போது, விவாதிக்கப்படும் ஒரு தலைப்பாக மாறியுள்ளது. இதன்மூலம் திமுக, நாதக-விற்கு ஆதரவு அளிக்குமா? அப்படி அளித்தால் தவெக-வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்று பலகேள்விகளை இது தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுப்புகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.