தி.மு.க. முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு...!

தி.மு.க. முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு...!
Published on
Updated on
1 min read

திமுக முப்பெரும் விழாவினையொட்டி வழங்கப்படும் விருதுகள் தொடர்பான பட்டியலை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

முன்னதாக, கருணாநிதி நூற்றாண்டு விழாவோடு, திமுகவின் 75வது ஆண்டையும் திமுக பவள ஆண்டாக சேர்த்தே கொண்டாட வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கும், அணிச் செயலாளார்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழா - திமுக பவள விழா இரண்டையும் சேர்த்து கொண்டாடும் விதமாக, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் வேலூரில் திமுக முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவில், ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும். அந்தவகையில் இந்தாண்டு, விருது வாங்குவோரின் பட்டியலும், விருதுகள் பெயரும் குறித்த அறிவிப்பை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. 

அதன்படி, பெரியார் விருது - கி.சத்தியசீலனுக்கும், அண்ணா விருது - க.சுந்தரத்திற்கும்,  கலைஞர் விருது - ஐ.பெரியசாமிக்கும், பாவேந்தர் விருது - மலிகா கதிரவனுக்கும், பேராசிரியர் விருது - ந.இராமசாமிக்கும் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com