
திருநங்கைகளுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்த்து வைப்பார்கள் என எம்.எல்.ஏ உதயநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய எம்.எல்.ஏ உதயநிதி, திருநங்கைகளுக்கு எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதனை தீர்ப்பதற்காக தங்களுடைய அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்றும் தி்முக இளைஞரணி செயலரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்திருக்கிறார். கடந்த 4 ஆண்டுகளில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு ஒன்று கூட நடைபெறவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.