தி.மு.க.வின் B Team தான் ஒபிஎஸ் என்பது நிரூபணம்...எடப்பாடி குற்றச்சாட்டு!

தி.மு.க.வின் B Team தான் ஒபிஎஸ் என்பது நிரூபணம்...எடப்பாடி குற்றச்சாட்டு!
Published on
Updated on
1 min read

ஓ.பிஎஸ்  தி.மு.க.வின் B Team  என்பது நிரூபணமாகியுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். 


சேலம் ஓமலூரில் செய்தியளார்களை சந்தித்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம், ஓபிஎஸ், டிடிவி சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஈபிஎஸ், ஓபிஎஸ் - டிடிவி சந்திப்பு குறித்து கடுமையாக விமர்சித்தவர், அவர்களுக்கு அதிமுகவில் இடம் இல்லை என்று உறுதிப்பட தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.க.வின்  B Team ஆக ஓ.பன்னீர் செல்வம் செயல்பட்டு வந்தது, தற்போது நிரூபணமாகியுள்ளது என்றும், இந்த Team தற்போது நிறுவனமாக மாறியுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.  

மேலும் பல கட்சிகளுக்கு தாவிய பண்ருட்டி ராமச்சந்திரன், கிளை செயலாளர் பொறுப்பு ஏற்க கூட தகுதி இல்லாதவர் என்றும் சாடினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com