“உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்டப்பா” - தனித்து விடப்பட்ட டிடிவி!! சமாதானப்படுத்தச் சென்ற அண்ணாமலை!!

மாநில தலைவர் பதவியை நாகேந்திரனுக்கு கொடுப்பதே சரியாக இருக்கும் என முடிவு செய்து அண்ணாமலையை...
ANNAMALAI_ADN_TTV
ANNAMALAI_ADN_TTV
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களின் வெற்றியை உறுதி செய்ய பம்பரமாக சுழன்று கொண்டு இருக்கின்றன. ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கட்டிலிருந்து இறங்கத் தயாராக இல்லை. அவர்களின் கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக -வின் சண்டை மூலைமுடுக்குகளில் எல்லாம் பேசுபொருளாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 11 அதிமுக -வும் பாஜக -வும் தங்களின் கூட்டணியை உறுதி செய்தன. ஆனால் கூட்டணி வைத்த  நாளிலிருந்தே அதிமுக -பாஜக கூட்டணி அடிமட்ட அளவில் ஒன்றிணையவில்லை என்ற கூற்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அதையெல்லாம் சரிசெய்து இப்போதுதான் இரு கட்சிகளும் தங்களின் ஒற்றுமையை உறுதி செய்து வருகின்றனர். ஆனால், சமீபத்தில், NDA கூட்டணியிலிருந்து ஒவ்வொருவராக கழன்றுகொண்டு வரும் போக்கும் நிகழ்கிறது.

ஆரம்பகட்டத்தில் பாஜக - அதிமுக கூட்டணி பொருந்தாமல் போனதற்கு சொல்லப்பட்ட பல காரணங்களில் முக்கியான ஒன்று அண்ணாமலை. அதற்கு காரணம் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்தபோது, எடப்பாடி பழனிச்சாமியை “தற்குறி” என்றெல்லாம் விமர்சித்திருந்தார். மேலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்றால் நான் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்” என பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை ஏற்கனவே பேசியிருந்தார், இதன் விளைவாக இபிஸ் -க்கும் அண்ணாமலைக்கும் ஏற்கனவே பஞ்சாயத்து இருந்தது.

இம்முறை பாஜக தனித்து போட்டியிட்டால் அது திமுக -விற்கு வலு சேர்ப்பதாகிவிடும், எனவே மாநில தலைவர் பதவியை நாகேந்திரனுக்கு கொடுப்பதே சரியாக இருக்கும் என முடிவு செய்து அண்ணாமலையை கழட்டி விட்டுவிட்டு எடப்பாடி உடன் கூட்டணி அமைத்தது பாஜக. 

தமிழ் நாடு பாஜக வரலாற்றில் மாநில தலைவர்கள் பதவிலியிருந்து வெளியேறும்போது அவர்களுக்கு உயர் பதவிகள் கொடுப்பது வழக்கம். (ஆளுநர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகள்)அந்த வரிசையில் தற்போது அண்ணாமலையும் இணைந்துள்ளாரா? என்ற கேள்விதான் அனைவர் மனதிலும் நிறைந்தது. ஆனால் இதுவரை அப்படி எந்த ஒரு பதவியும் அண்ணாமலைக்கு ஒதுக்கப்படவில்லை.

அதனால் பல நாட்களாகவே அண்ணாமலை பாஜக தலைமை மீது கடுப்பில் இருந்ததாகவே தெரிகிறது. இந்த சூழலில் தான்  அண்ணாமலை தனியாக கட்சி துவங்க உள்ளதாகவும் பல தகவல்கள் வெளியாகின. ஆனால் சமீபத்தில் அண்ணாமலை மீது சொத்துகுவிப்பு குற்றச்சாட்டு ஒன்று எழுந்தது. அண்ணாமலையின் இந்த சொத்து விவரங்களை வெளியிட்டதே பாஜக -வினர் தான் என்ற தகவல் அறிந்த உடன் அவர் செம கடுப்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது,.

இந்த சலசலப்புக்கு மத்தியில் தான் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார். மேலும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குறித்து விமர்சித்திருந்தார். இதெற்கெல்லாம் காரணம் அண்ணாமலை தான், அண்ணாமலையில் தூண்டுதல் பேரில்தான் தினகரன் கட்சியை விட்டு வெளியேறினார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

ஆனால் பாஜக தலைமை அண்ணாமலையின் சொத்து குவிப்பு விவகாரங்களை கோடிட்டு காட்டி, “2026 தேர்தலில் திமுக -வை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க வேண்டும். அதை விட்டு விட்டு கட்சிக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டால் ஜெலுக்கு போக வேண்டியதுதான்” என எச்சரிக்கை விடுத்ததாக சொல்லப்படுகிறது. 

இந்த சூழலில்தான் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று மாலை சென்னை அடையாறில் உள்ள  இல்லத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் வெளியேறிய நிலையில் மீண்டும் அந்த கூட்டணியில் இணையுமாறு அவரை வலியுறுத்துவேன் என ஏற்கனவே அண்ணாமலை தெரிவித்து இருந்த நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. 

அண்ணாமலை பேச்சைக்கேட்டு அவசரப்பட்டுவிட்டோமே என்ற எண்ணத்தில் இருக்கும் டிடிவி -யை நேரில் சென்று சமாதானம் செய்வாரா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வியே..

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com