விஜய்க்கு இவ்ளோ சொத்து மதிப்புகளா..? குடும்பத்திற்கு கடன் கொடுத்துள்ளார் விஜய்! அசையும் சொத்து-அசையா சொத்தின் மதிப்பு விவரங்கள்..

தனிப்பட்ட செல்வத்தைத் தாண்டி, விஜய் பல்வேறு துறைகளிலும் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளார்..
TVK vijay
Published on
Updated on
1 min read

தவெக தலைவர் விஜய், தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவில், இந்தியத் தேர்தல் விதிமுறைகளின்படி, வேட்பாளர்கள் தங்களது சொத்துக்கள் மற்றும் கடன்களைப் பட்டியலிடும் பிரமாணப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையில் விஜய் தனது சொத்துமதிப்புகளை சமர்ப்பித்தார்.

விஜய்யின் பிரமாணப் பத்திரத்தில், அவருக்குச் சொந்தமான அசையும் சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ. 404.58 கோடி ஆகும். விஜய் தனது வசம் ரூ.1.20 கோடி மதிப்பில் 883 கிராம் தங்கம் இருப்பதாகவும், மனைவி சங்கீதா வசம் ரூ. 4.07 கோடியில் 3,132 கிராம் தங்கம், ரூ.1 கோடி மதிப்பில் 134.91 காரட் வைரம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எம்.டபிள்யூ 530 உள்பட சுமார் ரூ. 6 கோடியில் 5 ஆடம்பர கார்கள் வைத்துள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நகைகளைப் பொறுத்தவரை, விஜய் சுமார் 883 கிராம் எடையுள்ள, ஏறத்தாழ ரூ. 1.20 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை அறிவித்துள்ளார். அவரது மனைவியிடம் இதைவிட விரிவான சேகரிப்பு உள்ளது. அதில் ஏறத்தாழ ரூ. 4.07 கோடி மதிப்புள்ள ஏறத்தாழ 391 சவரன் தங்க நகைகள் அடங்கும். மேலும், அவரின் குடும்பம் கிட்டத்தட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள வைரங்களையும் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட செல்வத்தைத் தாண்டி, விஜய் பல்வேறு துறைகளிலும் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளார். தன் மீது குற்றவியல் வழக்குகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சுயமாக வாங்கிய அசையாச் சொத்தின் மொத்த மதிப்பாக 92,76,03,409 ரூபாய் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் தொழிலாக குறிப்பிடப்பட்டுள்ளது, நடிப்பு, விஜய் வித்யாசிரம் நிர்வாகம், ஜெயா நகர் பிராபர்டி பி லிட் மேலாண்மை இயக்குநர், வித்யா சாரிடபுள் டிரஸ்ட் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார்.

தாய் ஷோபனாவுக்கு ரூ. 87 லட்சமும் தந்தை சந்திரசேகரக்கு ரூ. 3 கோடியும் த.வெக. பொதுச் செயலர் ஆனந்திற்கு ரூ. 3 கோடியும் விஜய் கடன் அளித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் தான் ரூ. 3.43 கோடி வருமான வரி நிலுவை வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com