
அரசியலுக்கு வருவது தனது எண்ணமில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
அண்மைகாலமாக மதிமுக கட்சி சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகனான துரை வைகோ பங்கேற்று வருகிறார். இதனால் அவர்தான் மதிமுகவின் அடுத்த அரசியல் வாரிசு என்ற பேச்சுகள் எழுந்தன. விரைவில் இவர் தேர்தல்களிலும் போட்டியிருவார் என்றும் கூறப்பட்டன. இதையெல்லாம் அறிந்த அவர், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனக்கு அரசியல் வேண்டாம் என நெல்லையில் செய்தியாளர் சந்திப்பின் போது அறிவித்தார்.
மேலும் அரசியல் வேறு, சேவை வேறு என்ற அவர் தனக்கு அரசியல் வேண்டாம் என திட்டவட்டமாக கூறினார். துரை வைகோவின் இந்த அறிவிப்பு மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.