பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்...! தமிழிசை செளந்தரராஜன்...!!

பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்...! தமிழிசை செளந்தரராஜன்...!!
Published on: 
Updated on: 
1 min read

தமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும் தற்போதைய தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் இன்று மதுரையி்ல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில், தான் பாஜக தலைவராக இருந்தபோது அனைத்து கூட்டணிக் கட்சி தலைவர்களிடமும் மரியாதையுடன் நடந்திருப்பதாக தெரிவித்தார். மேலும் பாஜக கட்சிக் குறித்து தற்போதைய தலைவர்களிடம் கேளுங்கள் எனவும் தன்னை இதில் இழுத்துவிடாதீர்கள் எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அனைவருக்கும் கருத்துக் கூற உரிமையுண்டு என்றும் அதனடிப்படையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவரது கருத்தை தெரிவித்து இருக்கிறார் என்றும் கூறினார்.


மேலும், 12 மணி நேர தொழிலாளர் திருத்தச் சட்டத்தை தொழிலாளர்களிடம் விட்டு விடக்கோரிய அவர் இதனை அரசியலாக்க  வேண்டாம் எனவும் கூறியுள்ளார். ஆனாலும், 4 நாட்கள் பணி 3 நாட்கள் விடுமுறை இருந்தால் தொழில் உற்பத்தி அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் வந்துள்ளன எனக் குறிப்பிட்ட அவர் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com