

வருகிற 2026 தேர்தலுக்குள் தமிழகத்தின் நிலையே தலைகீழாக மாறிவிடும் என்பதில் சிறு மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஜனவரிக்கு பிறகுதான் கட்சிகளின் கூட்டணி குறித்து ஒரு தெளிவான நிலைப்பாடு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை தனித்துவமாகியதில் விஜய் -க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த 2026 தேர்தல் திமுக வேண்டுமா? வேண்டாமா? என்பது மட்டும்தான். தேர்வுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், திமுக -விற்கு சாதகமாகவே அமைந்தாலும், விஜய் 20% வாக்குகளை நிச்சயம் உடைப்பார் என்கின்றனர். அரசியல் விமர்சகர்கள்.
ஆனால் கரூர் சம்பவத்திற்கு பிறகு, விஜய் மக்கள் சந்திப்பு எதையுமே நிகழ்த்தவில்லை, தமிழகத்தின் சில மாவட்டங்களில் பாதுகாப்பு கருதி அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தினர் புதுச்சேரியில், ரோட் ஷோவுக்கு அனுமதி கூறியிருந்த நிலையில் அதுவும் நிராகரிக்கப்பட்டது. பின்னர் நிபந்தனைகளுடன் பொதுக்குழு கூட்டம் நடத்திக் கொள்ளலாம், என அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் இன்று, புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் தவெக சார்பில் பொதுகுழுக்கூட்டம் நடத்தப்பட்டது. கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் முதன் முதலில் பங்கேற்கும் நிகழ்ச்சி இதுவே ஆகும். மேலும் இந்த கூட்டத்துக்கு 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த சூழலில்தான் தவெக வழங்கிய கியூ ஆர் கோட் அடங்கிய பாஸ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறைஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அண்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் காவல்துறை கட்டுப்பாடு விதித்தனர்.
இந்நிலையில் போதிய அளவு கூட்டம் இல்லாததால், கியூ.ஆர் கோடு இல்லாதவர்களையும் அனுமதிக்குமாறு ஒலிபெருக்கி மூலம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக்கொண்டார். உடனே இதற்கு ஆட்சேபம் தெரிவித்த முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங், ஆனந்திடம் இருந்து ஒலிப்பெருக்கியை வாங்கிக்கொண்டு கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றார், ஆனால் ஆனந்த கையால் சைகை காட்டி அனுமதி இல்லாதவர்களையும் உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த “ஈஷா சிங், இங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நீங்கள் பொறுப்பு ஏற்பீர்களா? ஏற்கனவே 40 -பேர் இறந்துவிட்டார்கள், நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எனக்கு சொல்ல தேவையில்லை” என பொதுவெளியிலே விட்டு விளாசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.