நிபா வைரஸ் பற்றி தேவையற்ற பதற்றம் அடைய வேண்டாம்- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

நிபா வைரஸ் பற்றி தேவையற்ற பதற்றம் அடைய வேண்டாம்  என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.   
நிபா வைரஸ் பற்றி தேவையற்ற பதற்றம் அடைய வேண்டாம்-   சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
Published on
Updated on
1 min read

சென்னை டிஎம்எஸ வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  அவர், பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா என்பது தொடர்பாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் 3.5 கோடி தடுப்பூசி இது வரை செலுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது வரை 14.4லட்சம் கையிருப்பு உள்ளதாகவும் கூறிய அவர், நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 6.2 லட்சம் தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டதாக தெரிவித்தார். 

நிபா வைரஸ் பரவல் தொடர்பாக நாமக்கல், கடலூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளையும் கூர்ந்து கண்காணித்து வருவதாகவும், அதேபோல் கோவை ,நீலகிரி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களையும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com