வழக்கறிஞர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிப்பு...!

Published on
Updated on
1 min read

நீதிமன்றங்கள் தவிர பிற இடங்களில் வழக்கறிஞர்கள் கழுத்துப் பட்டையோ, வக்கீல் கவுனையோ அணியக்கூடாது என்று பார் கவுன்சில் உத்தரவு அளித்துள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அணிய வேண்டிய உடைகள் குறித்து தமிழ்நாடு  மற்றும் புதுவை பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் அறிக்கை விடுத்துள்ளார்.   இதுகுறித்து தமிழ்நாடு  மற்றும் புதுவை பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி ஆண் வழக்கறிஞர்கள் கவுன்களுடன் கூடிய கருப்பு கோட், கழுத்தில் வெள்ளை பட்டை, வெள்ளை சட்டையுடன் முழு நீள கருப்பு அல்லது வெள்ளை பேண்ட் அணிந்துவர வேண்டும் என தெரிவித்துள்ளார். ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அதேபோல், பெண்கள் ஜீன்ஸ் அணிவது, கேப்ரி பேன்ட், ஷார்ட்ஸ்,  லெகின்ஸ் போன்றவை கண்டிப்பாக அணியக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எல்லா நேரங்களிலும் பரிந்துரைக்கப்பட்ட உடையில் மட்டுமே ஆஜராக வேண்டும் என்றும், உரிய ஆடை விதிகளின்படி, ஆஜராக வேண்டியது அனைத்து வழக்கறிஞர்களின் கடமை என்றும், வக்கீல்கள் சட்டம், 1961 இன் பிரிவு 35இன் கீழ்  எந்த மீறலும் தொழில்முறை தவறான நடத்தைக்கு சமம் என எச்சரித்துள்ளார்.

இந்திய பார் கவுன்சில் அல்லது நீதிமன்றம் பரிந்துரைக்கும் சம்பிரதாய நிகழ்வுகள், நீதிமன்றங்களைத் தவிர மற்ற பொது இடங்களில் எந்த ஒரு வழக்கறிஞரும் கழுத்துப் பட்டையையோ, வக்கீல் கவுனையோ அணியக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com