"காலணி எரித்த புகாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் டிஎஸ்பி"; நடந்தது என்ன?

"காலணி எரித்த புகாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் டிஎஸ்பி"; நடந்தது என்ன?
Published on
Updated on
2 min read

திருவள்ளுர் மாவட்டம் ஊத்தூக்கோட்டை அருகே  தலித்  மாணவர்களின் காலணிகளை காவல்துறை  டிஎஸ்பி எரித்ததாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதனை மறுத்து விளக்கமளித்துள்ளார், டிஎஸ்பி.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியில் இயங்கி வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பள்ளிக்கு வரும் மாணவர்கள், முறையற்ற சிகை அலங்காரம் மற்றும் முக்கால் பேண்ட் போட்டுக்கொண்டு பள்ளிக்கு வருவதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்ட சிசிடிவி காட்சிகள், சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. இதன் காரணமாக, அப்பகுதியில் அடிக்கடி ஊத்துக்கோட்டை துணை கண்காணிப்பாளர் கணேஷ் குமார் ஆய்வு மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, சிகை அலங்காரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் முறையான சீருடை அணிந்து பள்ளிக்கு வாருங்கள் எனவும் அறிவுரை கூறி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்களின் காலணிகள் ஸ்டைலாக இருந்ததாக கருதி, இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களின் காலணிகளை கழற்றி குப்பையில் போட்டு எரித்ததாக, மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதற்கு, தாங்கள் தலித் மாணவர்கள் என்பதால் டிஎஸ்பி கணேஷ்குமார் தங்களை அடிமைப்படுத்தும் விதமாக அடிக்கடி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு தங்களை கஷ்டப்படுத்துவதாகவும் தங்கள் பெற்றோர் தின கூலிக்கு சென்று அவர்களால் முடிந்த காலணிகளை வாங்கி கொடுத்து வரும் நிலையில் டிஎஸ்பி அவற்றை நெருப்பில் போட்டு எரித்துவிட்டார் எனவும், அவரிடம் பேச அருகில் சென்றால் விலகி தூரமாகச் சென்று நின்று பேசுவதாகவும் குற்றம் சாட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் கூறும் பொழுது,  தன்னுடைய எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களுக்கு வரும் வழக்கறிஞர்கள் ஒரு சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், அவர்களுக்கு சாதகமாக தான் செயல்படாதால் அவர்கள் இதுபோன்று தன்மீது வதந்திகளை பரப்புவதாகவும், அங்கு நடந்தது ஒன்று, தற்போது சமூக வலைத்தளங்களில் பரவுவது வேறு, என்று நடந்த சம்பவத்திற்கு மறுப்பு தெருவித்துள்ளார்.

மற்றொரு பக்கம், அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனை, அவரது தந்தை, இதுகுறித்து அம்மாணவனிடம்  விசாரிக்கும் போது, அம்மாணவன் டிஎஸ்பி அடிக்கடி தங்கள் பள்ளிக்கு வந்து ஆய்வு செய்து முறையான சிகை அலங்காரம், சீருடை, ஸ்டைலாக அணிந்து வரும் காலனிகள் குறித்து ஆய்வு செய்து மாணவர்களுக்கு அறிவுரை கூறி மாணவர்களை நல்வழிப்படுத்துவார் என கூறியுள்ளார்.

மேலும், அவர் மீது வீண்பழி சுமத்தி அவரை பணி மாறுதல் செய்வதற்காக தங்களது பள்ளி மாணவர்களை வைத்து ஒரு சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், அவரால் தற்போது பள்ளி மாணவர்கள் நல்வழிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அன்று, ஸ்டைல் ஆக மாணவர்கள் அணிந்து வந்த காலணிகளை கழற்ற சொல்லி அவற்றை பள்ளியில் வைத்த நிலையில், பள்ளி நிர்வாகத்தினர் அதை எடுத்து தெரியாமல் எரித்த விட்டதாகவும், அதற்கு பதிலாக வேறு காலணிகளை தானே வாங்கி தருவதாகவும் டி எஸ் பி தெரிவித்துள்ளார் என மாண தெரிவிக்கும் வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com