விலைவாசி உயர்வால்...வாங்கும் சக்தியை இழந்திருக்கிறார்கள் - பி.டி.ஆர்!

விலைவாசி உயர்வால்...வாங்கும் சக்தியை இழந்திருக்கிறார்கள் - பி.டி.ஆர்!
Published on
Updated on
1 min read

கொரோனாவிற்கு பிறகு பொருட்கள் வினியோக சுழற்ச்சியில் உள்ள சிக்கலால் மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் குறித்து விளக்கம்:

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பணவீக்கத்தில் தமிழ்நாட்டின் நிலைக் குறித்து விளக்கமளித்தார். 
அப்போது பேசிய அவர், "உற்பத்தி குறைந்து, தேவை அதிகரித்தால் விலை அதிகரிக்கும். விலை உயர்ந்து வாங்கும் சக்தி குறையும் போது பணவீக்கம் ஏற்படும். அப்படி கொரேனா பரவல் காரணமாக நூற்றாண்டுகள் காணாத பொருளாதார சிக்கல் ஏற்பட்டு, உற்பத்தி கடுமையாக சரிந்தது. இதன் காரணமாகவே உலகளவில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மாநில அரசின் கடனை நிர்ணயம் செய்யும் மத்திய அரசு:

மேலும் மாநில அரசு எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்று மத்திய அரசு  நிர்ணயம் செய்திருப்பது ஏற்புடையதல்ல எனவும், இவ்வளவு தான் கடன் வாங்க வேண்டும் என  தங்களுக்கு மத்திய அரசு கட்டளையிட கூடாது எனவும்  பி.டி.ஆர் குறிப்பிட்டார். தொடர்ந்து, மாநில அரசு நிதி நிலையை சரியாக நிர்வகித்து வருவதாகவும், அதனால் வருவாய் பற்றாக்குறை இந்த ஆண்டும் பெரும் அளவு குறையும் என்றும் பிடிஆர் நம்பிக்கை தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com