“Dummy Daddy எனத் தொடங்கி.. Sweet Uncle என முடிந்த X பதிவு" - ஸ்டாலினை சீண்டும் தவெக ஐடி விங்! மீண்டும் வெடிக்கும் வார்த்தை போர்

"அவசர அவசரமாக விலைவாசி உயர்வு பற்றி அரைவேக்காட்டுப் பதிவு போட்ட Dummy Daddy அவர்களே!"
DMK vs TVK
DMK vs TVK
Published on: 
Updated on: 
1 min read

இன்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் விலை வாசி உயர்வு குறித்து ஒரு பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக தவெக IT Wing தனது X தளபக்கத்தில் மு. க. ஸ்டாலினை கடுமையாக சாடி பதிவிட்டுள்ளது. ஏற்கனவே, தமிழகத்தில் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளதை மு. க. ஸ்டாலின் சாடியது குறிப்பிடத்தக்கது.

தவெக IT Wing தனது X தளபக்கத்தில், "அவசர அவசரமாக விலைவாசி உயர்வு பற்றி அரைவேக்காட்டுப் பதிவு போட்ட Dummy Daddy அவர்களே!

காலநிலை மாற்றத்தால் உற்பத்தி குறைந்துள்ளதால், ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்து கொள்முதல் செய்யப்படும் சன்னரக அரிசியின் விலை உயர்ந்துள்ளது. இந்த விவகாரத்தை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் உடனடியாக மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

முதலமைச்சரின் ஆலோசனையின்படி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மாநிலம் முழுவதும் உள்ள அமுதம் அங்காடிகளில் குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த, ஒரு லட்சம் மெட்ரிக் டன் அரிசியை (தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி) உடனடியாகக் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டு, கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், நாளை 25,000 மெட்ரிக் டன் அரிசியை அனைத்து அமுதம் அங்காடிகளுக்கும் அனுப்பி, கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விலையேற்றத்திற்கு உற்பத்திக் குறைவு ஒரு காரணமென்றால், அரசியல் காழ்ப்புணர்வுடன் செயல்படும் சில அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியைப் பதுக்கி வைப்பதும் முக்கியக் காரணம். இந்த முறைகேடுகளைக் களையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தினத்தந்தி நாளிதழைச் சுட்டிக்காட்டிய Dummy Daddy அவர்களே, அதே செய்தியின் தலைப்பில் இடம்பெற்ற “எல் நினோ தாக்கத்தால் உற்பத்தி குறைவு” என்ற வரி கண்ணில் படவில்லையா? அல்லது அரசியல் காழ்ப்புணர்வு கண்ணை மறைத்துவிட்டதா?

செய்தியை முழுமையாகப் படித்திருந்தால் இந்த அரைவேக்காட்டுப் பதிவைப் போட்டிருக்க மாட்டீர்கள். அவசரத்தில் அரசியல் செய்ய நினைத்து, உங்கள் சொந்த ஆதாரத்திலேயே அம்பலப்பட்டு நிற்கிறீர்கள்!

மண்டை மேல இருக்கிற கொண்டையை மறந்துட்டீங்க, Sweet Uncle!" என்று காட்டமாகவும், சினிமா வசனத்துடன் சேர்த்து பதிவிட்டுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com