"காவிரி ஒழுங்காற்று  கூட்டத்தில் 1.5 டி.எம்.சி நீரைத் திறந்துவிடுமாறு கேட்போம்" துரைமுருகன்!!

Published on
Updated on
1 min read

டெல்டா மாவட்டங்களில்  நடைபெறும் கடையடைப்பு போராட்டம் விவசாயிகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் போராட்டம் என்று நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தின் முன்பு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது, காவிரி பிரச்சனை தொடர்பாக டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுவது குறித்த கேள்விக்கு, அவர்களின் உணர்வுகளை காட்டுகிறார்கள் என்று பதிலளித்தார். 

காவிரி ஒழுங்காற்று பொதுக்கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது, தமிழ்நாடு அரசு வலியுறுத்துவது என்ன என்பது குறித்த கேள்விக்கு, எப்போதும் தெரிவிக்கக் கூடிய வழக்கமான கருத்துக்களை எடுத்துரைப்போம் எனகே கூறிய அவர், பிலி குண்டு அணையில் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை 18 நாட்களுக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 4.6 டி.எம்.சி.தண்ணீர் வர வேண்டிய இடத்தில் தற்போது வரை 3.15 டி எம் சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது, இன்னும் 1.5  டி எம் சி  நீர் வர வேண்டி உள்ளது அதனை கேட்போம் என பதிலளித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் காவிரி விவகாரத்தில் திமுகவும் காங்கிரசும் நாடகம் நடத்துவதாக பதிவிட்டுள்ள வீடியோ குறித்த கேள்விக்கு, அவர் பெரியவர் அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா? என நகைச்சுவையாக பதிலளித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com