"வரலாற்று துரோகம்" அரசியல் சர்ச்சையாக வெடித்த துரைமுருகன் வீட்டு கல்யாணம்.. "எனக்கு மந்திரம் தெரியும்" வைரலாகும் பழைய பேட்டி!

"நடுவில் வருபவர் இளவரசி என்றால் சுற்றி வருபவர்கள் அடிமைப் பெண்களா.. சுயமரியாதை பேசும் இயக்கத்தின் பொதுச்செயலாளர் வீட்டில் இப்படியா?" என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Duraimurugan’s family wedding sparks a political controversy, labeled a "historic betrayal"
"வரலாற்று துரோகம்" அரசியல் சர்ச்சையாக வெடித்த துரைமுருகன் வீட்டு கல்யாணம்.. "எனக்கு மந்திரம் தெரியும்" வைரலாகும் பழைய பேட்டி!
Published on: 
Updated on: 
2 min read

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வீட்டு திருமணம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

துரைமுருகனின் பேத்தியும், வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த் - சங்கீதா தம்பதியரின் மகளுமான செந்தாமரைக்கும், திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவி - தீபா தம்பதியரின் மகன் தீபக் ரவிக்கும் திருமணம் கடந்த நவம்பர் 1 மற்றும் 2, 2026 தேதிகளில் நடைபெற்றது.

இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கனிமொழி எம்.பி., பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, சௌமியா அன்புமணி,  பிரேமலதா விஜயகாந்த், திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

அரசியல் சர்ச்சையான திருமணம்

கிழக்கு கடற்கரை சாலையின் மாமல்லபுரம் அருகே உள்ள சொகுசு விடுதியில் நடந்த இந்த திருமணத்தின் பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. குறிப்பாக சாம்பல் வண்ணம் பூசப்பட்ட பெண்கள் சுற்றி வர நடுவில் மணமகள் வந்த வீடியோவுக்கு பலரும் விமர்சனங்கள் எழுப்பினர்.

"நடுவில் வருபவர் இளவரசி என்றால் சுற்றி வருபவர்கள் அடிமைப் பெண்களா.. சுயமரியாதை பேசும் இயக்கத்தின் பொதுச்செயலாளர் வீட்டில் இப்படியா?" என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த திருமணம் மிகவும் ஆடம்பாரமாக நடந்தது குறித்து பலரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். யுவன் சங்கர் ராஜா இசைக் கச்சேரியும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

சிலர் திராவிடர் கழகம் சார்பாக சுய மரியாதை திருமணங்கள் நடக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, இரண்டுக்குமான வித்தியாசங்களை சுட்டிக்காட்டியுள்ளனர்.

திமுக கொள்கைகளுக்கு மாறாக, ஐயர் மற்றும் சமஸ்கிருத வேத மந்திரங்கள் முழங்க வைதீக முறைப்படி இந்தத் திருமணம் நடைபெற்றதும் விமர்சனங்களை எழுப்பியது.

சொந்த கட்சியினரே எதிர்ப்பு!

திராவிடர் இயக்கத் தமிழ் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன், "என் பெருமதிப்பிற்குரிய - என்னிடம் பேரன்பு காட்டும் - திமுகழகத்தின் பொதுச்செயலாளர், அண்ணன் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் பார்ப்பனர்களின் சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டு, இப்போதும் வலிக்கிறது என் இதயம்!" எனப் பதிவிட்டிருந்தார்.

Duraimurugan Family Wedding
Duraimurugan Family Wedding

தி.மு.க முன்னாள் எம்.பி டாக்டர் செந்தில்குமார் எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் துரைமுருகன் குடும்பத் திருமண வீடியோவைப் பகிர்ந்து பதிவிட்டிருப்பதாவது: “மேடைகள் தோறும் சுயமரியாதை  திருமணங்களை பிரகடனப்படுத்திய கொள்கை பிடிப்புள்ள கழகத்தில்

அதனை கடைபிடிக்க கூடிய வாய்ப்பினை தவறவிட்டதில் தனிபட்ட முறையில்  உடன்படவில்லை.” தெரிவித்துள்ளார்.

தமிழறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகனும் தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளருமான பொழிலன், "தி.மு.க-வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களின் இல்லத் திருமணம். 

ஆரியப் பார்ப்பனர்களை வைத்துத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தி.மு.க அறிவித்து விடுவது நல்லது. இல்லை, அது தவறு என்று சொன்னால் தி.மு.க-வின் பொதுச் செயலாளர் துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...

ஊழல் செய்து பணம் சுருட்டுவது எந்த அளவு தவறானதோ அதற்குக் கொஞ்சமும் குறையாதது, ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு  நேர்எதிராகத் தன் வாழ்வியலை அமைத்துக் கொள்வது.

தி.மு.க-வின் தலைமைதான் விடை சொல்ல வேண்டும்.” என விமர்சித்திருந்தார்.

திராவிடர் விடுதலை கழகம் பொதுச் செயலாளர் விடுதலை க.ராசேந்திரன், "அண்ணா, கலைஞர், கொள்கைகளுக்காவது துரோகம் செய்யாமல் இருந்திருக்கக் கூடாதா? அவர்களின் வழியாக கிடைத்த அதிகாரத்தை ஆரியத்திடம் அடமானம் வைப்பது வரலாற்றுத் துரோகம் அல்லவா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Duraimurugan in his Family Wedding
Duraimurugan in his Family Wedding

முன்னாள் திமுக எம்.பி செந்தில் குமார், "மேடைகள் தோறும் சுயமரியாதை திருமணங்களை பிரகடனப்படுத்திய கொள்கை பிடிப்புள்ள கழகத்தில், அதனை கடைபிடிக்கக் கூடிய வாய்ப்பினை தவறவிட்டதில் தனிப்பட்ட முறையில் உடன்படவில்லை" எனக் கூறியுள்ளார்.

"துரைமுருகனை மந்திரி சபையில் இருந்து நீக்குங்கள்" - வீரமணி பேசியது எப்போது?

துரைமுருகன் திராவிடர் கழகம், பெரியாரியர்கள் பகுத்தறிவுவாதிகளின் கோபத்தை பெறுவது இது முதன்முறை அல்ல.

துரைமுருகன் சிறுவயதில் மந்திரங்கள் ஓதி, தினமும் கோவிலுக்கு சென்று வந்து பக்திமாயமாக இருந்ததை நினைவுகூரும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

மேலும், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சென்றதால் மந்திரிபதவியை விட்டு துரைமுருகனை கீழிறக்க வேண்டுமென கி.வீரமணி பேசியதாகவும், கருணாநிதி அதனை கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் பேசியிருக்கிறார்.

Duraimurugan’s family wedding sparks a political controversy, labeled a "historic betrayal"
தவெகவை எதிர்க்க திமுக + அதிமுகவின் `வியூகம்'.. மையத்தில் சீமான்? இடைத்தேர்தல் புயலுக்கு தயாராகும் கட்சிகள்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.