

பூம்புகார் தொகுதியில் உள்ள மீனவ கிராமங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பு.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய அரசியல் தலைவர்களும் ஒவ்வொரு தொகுதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் நிவேதா எம்.முருகனை ஆதரித்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட கடலோர பகுதிகளில் உள்ள வானகிரி, சின்னமேடு, சின்னங்குடி உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்த துர்கா ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வகைக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடி தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார் துர்கா ஸ்டாலின் “மீண்டும் திமுக அரசு அமைவதற்காக நீங்கள் அனைவரும் உறுதியாக ஆதரவு வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள், மீனவ பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவ மக்கள் இருந்தனர்.
பிரச்சாரத்தின் போது துர்கா ஸ்டாலின் பொதுமக்களுடன் உற்சாகமாக கலந்து கொண்டார். பெண்கள், இளைஞர்கள் அவருடன் கைகுலுக்கி, சுயபடம் எடுத்து மகிழ்ந்தனர்; பொதுமக்கள் அனைவரிடமும் புன்னகையுடன் உரையாடினார். தொடுவாய் கிராமக் கூட்டத்தில், ஒரு பெண்ணின் இரட்டைக் குழந்தைகளை அன்புடன் தூக்கிக் கொண்டு கொஞ்சி மகிழ்ந்தார். அங்கிருந்த மகளிர் அனைவரிடமும் கோரிக்கைகளை கேட்டறிந்த துர்கா ஸ்டாலின் சுயஉதவிக் குழுவினரிடம், பெண்கள் மற்றும் மீனவர்களின் முன்னேற்றத்திற்காக திமுக அரசு செயல்படுகிறது என கூறி, வேட்பாளர் செந்தில் செல்வனுக்கு ஆதரவு கோரினார்.
பின்னர் திருமுல்லைவாசலில் உள்ள செல்ல காளியம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்த அவர், மீனவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.