
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற யோக லட்சுமி நரசிம்ம சுவாமி மலைக்கோயில். நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்தக்கோயிலில் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் இன்று துர்கா ஸ்டாலின் மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக இந்தக் கோயில், மலை மேல் உள்ளதனால் கோவில் நிர்வாகம் சார்பில் ரோப்கார் வசதி போன்ற பல்வேறு வசதிகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.