திமுக பிரமுகர் வீட்டில் ED சோதனை நிறைவு... கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள்!!

திமுக பிரமுகர் வீட்டில் ED சோதனை நிறைவு... கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள்!!
Published on
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதன் வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்த நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதனுக்கு சொந்தமான இடங்களில் நேற்று மதியம் முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, துப்பாக்கி ஏந்திய போலீசார் வீட்டின் முன் குவிக்கப்பட்துள்ளார்கள். 

மேலும், அவரது தோட்டத்து வீட்டில் நள்ளிரவு வரை சுமார் 18 மணி நேரம் அமலாக்கத் துறை அதிகாரிகளின் சோதனை தொடர்ந்துள்ளது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சோதனையின்போது வீட்டில் 30-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு  படை வீரர்கள் குவிக்கப்பட்டதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் காணப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com