
சென்னை மதுரை திண்டுக்கல் உட்பட அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவல்லிக்கேணியில் உள்ள எம்எல்ஏ விடுதியிலும் சோதனை செய்வதற்கு அதிகாரிகள் சென்றுள்ளனர்.
திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள பழனி சட்டமன்ற உறுப்பினரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ பி செந்தில்குமார் வீட்டிலும் ரெய்டு நடைபெற்றுவருகிறது.
சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற அலுவலர் குடியிருப்பில் ஐ.பெரியசாமின் மகன் செந்தில் வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலையிலிருந்தே நடைபெற்றுவரும் இந்த திடீர் சோதனையால், அப்பகுதியில் சிறுது நேரம் பதற்றம் நிலவியது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.