எட்டா கனியாகி விட்டது...இது தான் மாடல் ஆட்சியா? ஈபிஎஸ் கண்டனம்!

எட்டா கனியாகி விட்டது...இது தான் மாடல் ஆட்சியா?  ஈபிஎஸ் கண்டனம்!
Published on
Updated on
1 min read

ஆவின் பால் மற்றும் நெய் விலையை தொடர்ந்து வெண்ணை விலை உயர்த்தப்பட்டுள்ளது சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வெண்ணெய் விலை அதிரடி உயர்வு:

பால் மற்றும் நெய் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்திய நிலையில் வெண்ணெய் விலையையும் தற்போது உயர்த்தியுள்ளது.  அதன்படி சமையல் பயன்பாட்டிற்கான உப்பு  கலக்காத 100 கிராம் வெண்ணை, 52 ரூபாயில் இருந்து 55 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிராம் வெண்ணை 250-லிருந்து 260 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் உப்பு கலந்த 500 கிராம் வெண்ணெய் 255-லிருந்து, 265-ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றமானது இன்று முதல் அமலுக்கு வந்ததாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வெண்ணெய்        பழைய விலை   புதிய விலை

100 கிராம்                 ரூ.52                     ரூ.55
(உப்பு கலந்தது)

100 கிராம்                 ரூ.52                     ரூ.55
(உப்பு கலக்காதது)

500கிராம்                  ரூ.250                   ரூ.260

கண்டனம் தெரிவிக்கும் எடப்பாடி:

ஆவின் பொருட்களின் தொடர் விலை உயர்விற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அவரது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ஏழை எளியோர் மற்றும் நடுத்தர வர்கத்தினருக்கு, ஆவின் பொருட்களை எட்டா கனியாக்கி இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற நிலைக்கு திமுக அரசு தள்ளியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பால் பொருட்கள் மூலம் எளிய மக்கள் பெற்று வந்த குறைந்த பட்ச ஊட்டச்சத்தை கூட அவர்களுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா? என கேள்வியும் எழுப்பியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com