மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான முதல்வர் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மேகதாதுவில் அணை கட்டப்படும் என அறிவித்துள்ள கர்நாடக அரசுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 
மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான முதல்வர் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Published on
Updated on
1 min read
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி கோரியதை எதிர்த்து அதிமுக ஆட்சியில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதாக கூறியுள்ளார்.  இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில்,  மேகதாதுவில் அணை கட்டப்படும் என அறிவித்துள்ள கர்நாடக முதலமைச்சரின் ஒரு தலைப்பட்சமான அறிவிப்புக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 
மேலும், கர்நாடக அரசின் நடவடிக்கைகளை கூர்மையாக கவனித்து, தமிழ்நாட்டுக்கு கிடைக்க பெறுகிற காவேரி நீரை முழுமையாக பெறுவதற்கும், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் போக்கிற்கு எள்முனையளவு கூட இடமளிக்க கூடாது என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொண்டுள்ளார். 
தமிழ்நாட்டின் விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com