திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார் எடப்பாடி பழனிசாமி...

திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார் எடப்பாடி பழனிசாமி
திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார் எடப்பாடி பழனிசாமி...
Published on
Updated on
1 min read

தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அவரது மகன், மருமகள் மற்றும் உளுந்தூர்பேட்டை முன்னாள் எம்எல்ஏ குமரகுரு ஆகியோர் இன்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டனர்.

நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்த அவர்கள் திருப்பதி மலையில் உள்ள வராக சுவாமி கோவிலில் அவர்கள் நேற்று இரவு சாமி தரிசனம்  செய்தனர். தொடர்ந்து இன்று காலை கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஆகியோர் ஏழுமலையானை வழிபட்டனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தேவஸ்தான அர்ச்சகர்கள் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்தாருக்கு ஆசி வழங்கினர். தொடர்ந்து கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் அருகே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com