"மனைவி, குழந்தைகளுடன் வாழ வேண்டும்.." பர்சனலை தாக்கிய எடப்பாடி; "இபிஎஸ் கால்களை தேடி வந்த விஜய்.." - முற்றிய ஐடிவிங் மோதல்

"திமுகவிடம் கட்சியை அடகு வைத்ததோடு மட்டும் இல்லாமல், திமுகவின் முழு அடிமையாகவும் மாறிவிட்டவர்தான் இந்த இடர்ப்பாடி." - தவெக ஐடிவிங்
ADMK - TVK IT wings attacking eachother amid by elections
பர்சனலை தாக்கிய எடப்பாடி - முற்றிய ஐடிவிங் மோதல்AI Generated
Published on: 
Updated on: 
2 min read

தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி மானூர் பாளையத்தில் பரப்புரை செய்தார்.

கூட்டத்தில் பொதுமக்களிடம் பேசிய அவர், "இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல்.

முதலமைச்சர் தொழில் முதலீட்டை ஈர்க்க லண்டன் போனார் என நினைத்திருந்தோம். லண்டன் போன பிறகு வந்த படத்தைப் பார்த்தேன். வேறு படம் வந்துள்ளது.

அடுத்த படம் வந்தது. முதலீடு வருகிறது என மகிழ்ச்சியோடு இருந்தோம். ஆனால், 32 இடங்களில் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களின் உரிமையாளர்களை லண்டனுக்கு வரவழைத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறார்கள்."

"லண்டன் பயணம் ஏன் சென்றார் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். திரைப்படத்தில் நடிப்பது போல, கூட்டங்களில் கையை, காலை ஆட்டி பேசிவருகிறார். குடும்பத்தில் ஒருவர் எனப் பேசுகிறார். ஆனால், குடும்ப உறவு என்பது என்ன? தாய், தந்தை, மனைவி, பெற்ற பிள்ளைகளோடு வாழ வேண்டும். பாசம், அன்பு அங்கேதான் பிறக்கிறது.

ஒருமுறை மக்கள் ஏமாந்துவிட்டார்கள். விபத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். சொல்வதை எல்லாம் மக்கள் கேட்க மாட்டார்கள்" எனப் பேசினார்.

இந்தப் பேச்சுக்கு தவெக ஐடி விங், "வரம்பு மீறி, வார்த்தைகள் மீறி, நாகரிக எல்லையைத் தாண்டி நாராசமாகப் பேசத் தொடங்கிய தீர்ந்துபோன சக்தியின் கொள்ளைத் தலைமை எடப்பாடி, தன் சுயரூபத்தை வெளிக்காட்டிவிட்டார்.

நன்றி மறப்பது, நம்பியவர்களை முதுகில் குத்துவது, நம்பி வருபவர்களை நட்டாற்றில் விடுவது, குடும்ப சுயநலத்திற்காகவும் சொந்த லாபத்திற்காகவும் கூட்டுக் களவாணித்தனம் செய்வது எனத் தன் குணாதிசயங்கள் அனைத்தையும் பொதுவெளியில் கொட்டத் தொடங்கியுள்ளார்."

"கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில், தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட பிறகு, திமுகவுடன் கள்ள உறவை ஏற்படுத்திக்கொண்டு, மக்கள் தீர்ப்புக்கு எதிராகத் திருட்டுத்தனமாக ஆட்சி அமைத்துக் கொள்ளை அடிப்பதைத் தொடர நினைத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இயக்கத்தை, ஜெயலலிதா அம்மையார் கட்டிக்காத்த இயக்கத்தைக் காட்டிக் கொடுத்து அறிவாலயத்தில் அடகு வைத்தவர்தான் இந்த இடர்ப்பாடி.

திமுகவிடம் கட்சியை அடகு வைத்ததோடு மட்டும் இல்லாமல், திமுகவின் முழு அடிமையாகவும் மாறிவிட்டவர்தான் இந்த இடர்ப்பாடி. அதனால்தான், திமுக எடுக்கும் ஆபாச வாந்தியை இவரும் பொதுவெளியில் அப்படியே எடுக்கிறார்.

தனிப்பட்ட முறையில் அநாகரிகமாகப் பேசத் தொடங்கி உள்ள முன்னாள் பா.ஜ.க அடிமையும் இந்நாள் திமுக அடிமையுமான இடர்ப்பாடிக்கு இந்த இடைத்தேர்தலில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்கள் சரியான பதிலடி கொடுப்பதோடு, தமிழக மக்களும் அவரது அநாகரிகப் புத்தியில் ஓங்கி அடித்து ஓரமாக உட்கார வைக்கப் போவது உறுதி." என பதிலடி கொடுத்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள அதிமுக ஐடிவிங், "ஒருத்தர் அன்பா பண்பா அப்பா அம்மா, மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்தோடு வாழ வேண்டும் என்று சொல்வது எந்த அகராதியில் வரம்பு மீறல், வார்த்தை மீறல்?

“ல்தகா சைஆ” போன்ற நாராசத் தத்துவங்கள் எதையும் நாங்கள் சொல்லவில்லையே..??!!

குடும்பத்தோடு வாழச் சொல்வது தவெக-வுக்கு நாராசமாக இருக்கிறதா? அது சரி, குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்? பெற்ற தாய் தந்தை மீதே வழக்கு போட்டவரை தலைவராக வைத்துள்ள கட்சியினருக்கு பாசம், குடும்பம் என்பது எல்லாம் கெட்ட வார்த்தை தான் போல!

கடந்த கால வரலாற்றை பேச வேண்டும் என்றால் விஜயின் வரலாற்றை விட ஒரு கேவலமான வரலாறு உலகில் இருக்க முடியுமா?

இன்று வாய்கிழிய “தீயசக்தியின் ஒரே எதிரி நான் தான்” என்று முழங்கி சர்க்காரியா கமிஷன் பற்றி எல்லாம் பேசும் உங்கள் தலைமை தற்… மன்னிக்க… ஆச்சரியக்குறிக்கு, கருணாநிதி காலில் விழுந்து வானளாவ புகழ் பாடிய போது அதெல்லாம் தெரியவில்லையா?"

"தன்னுடைய திரைப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காக மாண்புமிகு அம்மா அவர்களின் கால்களைத் தேடி கொடநாட்டிற்கும், எடப்பாடி பழனிசாமி அவர்களின் கால்களைத் தேடி சேலத்திற்கும் செவ்வந்தி இல்லத்திற்கும் மாறி மாறி அலைந்த போதெல்லாம் இன்றைக்கு பேசும் இந்த பேச்சு தெரியவில்லையா?

ஆபாச நதி, வாந்தி என்றெல்லாம் பேசும் இந்த இணைய தற்குறிகள், என்றைக்காவது விஜய் படங்களை எல்லாம் பார்த்தது உண்டா? பார்த்த பிறகும் இப்படி எல்லாம் பேசலாமா?

செல்லும் தெருவெல்லாம் மக்களால் விரட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த குதிரைபேரக் கும்பலுக்கு ரோஷம் ஒன்று தான் கேடா?

(திமுக ஐடி விங்கை குறிப்பிட்டு) ஆதிவாசி அடக்கி வாசி" என சரமாரியாக வார்த்தை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ADMK - TVK IT wings attacking eachother amid by elections
ஜெம் வீரமணி வழக்கு: "CM விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமாருக்கு “சம்மன்” அனுப்ப வேண்டும்!” - திமுக மனு!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com