“திண்டுக்கல்லில் நடந்த ஆலோசனை கூட்டம்” - எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு.. செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஓ.எஸ்.மணியன், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை சந்தித்து கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் பேசியதாக..
EPS VS Senkottaiyan
EPS VS Senkottaiyan
Published on
Updated on
1 min read

அதிமுகவில் தொடர்ந்து உட்கட்சி பூசல்கள் காரணமாக அமைச்சர் செங்கோட்டை (செப் 05) செய்தியாளர்கள் சந்திப்பில் மனம் திறப்பதாக தெரிவித்திருந்தார். செங்கோட்டையன் என்ன சொல்ல போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் நேற்று ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் “கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் வருகின்ற தேர்தலில் வெற்றி வாகை சூட முடியும்.

வரும் (செப் 15) ஆம் தேதிக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க முயற்சி எடுக்கவில்லை எனில் நாங்கள் அதை செய்வோம்” என தெரிவித்திருந்தார். அதாவது எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு காலா அவகாசம் கொடுத்த வகையில் அவரது பேச்சுக்கள் அமைத்திருந்தது. இதனை தொடர்ந்து “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” சுற்று பயணத்தில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி இன்று திண்டுக்கல்லில் தான் தங்கியிருந்த ஓட்டலில் கட்சியின் சில முக்கிய நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஓ.எஸ்.மணியன், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை சந்தித்து கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் பேசியதாக சொல்லப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு கட்சியின் பொது செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை கழக அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்தும்,ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலிருந்தும், நீக்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் செங்கோட்டையன் ஆதரவாளர் சிலரின் பதிவுகளும் கட்சியிலிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் செங்கோட்டையனை சந்தித்து அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர். ஏற்கனவே நேற்று பேசிய செய்தியாளர்கள் சந்திப்பில் “நீங்கள் செய்யாவிட்டால் நாங்கள் செய்வோம்” என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால், அவரின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி அரசியல் விமர்சகர்கள் மற்றும் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில அரசியல் விமர்சகர்கள் செங்கோட்டையன் அவர் சொன்னது போல அதிமுகவிலிருந்து நீக்கியவர்களை ஒன்றிணைத்து அடுத்த கட்ட நகர்வை எடுப்பார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com