இலங்கைத் தமிழர்கள் 12 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கைத் தமிழர்கள் 12 பேர் தமிழகத்தில் தஞ்சம்!
Published on
Updated on
1 min read

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஆறு சிறார்கள் உட்பட 12 பேர் தனுஷ்கோடி அடுத்த நான்காம் மணல் திடலில் தஞ்சமடைந்தன்ர். அவர்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மீட்டு மண்டபம் கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பொருளாதார நெருக்கடி

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு நாளுக்கு நாள் இடம் பெயர்ந்த வருவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே இலங்கை இருந்து வாழ வழியின்றி 150 நபர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர் அவர்களை மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அகதி முகாமில் தங்கவைப்பு

இந்த நிலையில் இன்று மேலும் இலங்கையில் இருந்து வாழ வழியின்றி ஆறு சிறார்கள் உட்பட 12 நபர்கள் தனுஷ்கோடி அருகே தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர். கடலோர காவல் குழுமம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com