தமிழகத்தில் தீவிரமடையும் தேர்தல் பிரச்சாரம்... வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த காங். வேட்பாளர்!!

தமிழகத்தில் தீவிரமடையும் தேர்தல் பிரச்சாரம்... வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த காங். வேட்பாளர்!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 109 வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுகன்யா, பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 
Published on

தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது.

அதன்படி,  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 109 வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சுகன்யா தீவிர வாக்கு சேகரிப்பில் களமிறங்கியுள்ளார். சூளைமேடு பகுதியில் உள்ள பஜனை கோவில் தெருவில் வீடு வீடாகச் சென்ற வாக்கு சேகரித்த அவர், மக்களின் குறைகளையும் நேரடியாக கேட்டறிந்தார். 

அப்போது, முதன்முறையாக தேர்தலில் நின்று போட்டியிடும் தான், வெற்றி பெறும்பட்சத்தில், மழைக்காலங்களில் நீர் தேங்குவது, கால்வாய் அடைப்பு உள்ளிட்ட மக்களின் பிரதானமான கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்  என உறுதிபட கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com