கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்...! வெளியான அறிவிப்பு..!

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்...! வெளியான அறிவிப்பு..!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20, 000 கூட்டுறவு சங்கங்களுக்கு வரும் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த முடிவு செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைப்பெற்ற தேர்தலில், வெற்றி பெற்றவர்களுக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ளது. கூட்டுறவுச் சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைத்து நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. அதனால் ஏற்கனவே உள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னரே தேர்தலை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ள கூட்டுறவுத்துறை அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com