வக்பு வாரியத்திற்கு சொந்தமான ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்துல் ரகுமான், தமிழ்நாட்டின் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதை மீட்கும் பணிகளில் வக்பு வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட சமூக விரோத கும்பல் ஒன்று பணப்பறிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.