அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் திடீர் டில்லி பயணம், பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான அமிர்ஷா உடனான சந்திப்பு தான் கடந்த இரண்டு நாட்களாக தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருந்து வருகிறது. டில்லியில் அப்படி என்ன தான் நடந்தது?
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் இல்லாமல் அவருடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் டில்லி நேற்று திடீரென புறப்பட்டு டில்லி சென்றனர். பாஜக தலைவர்களை சந்திக்க தான் இந்த பயணம் என சோஷியல் மீடியாவில் தகவல் பரவியது. ஆனால் இதை மறுத்த எடப்பாடி பழனிச்சாமி, கட்சி அலுவலகத்தை பார்வையிட தான் வந்தோம். எந்த பிரத்யேக நபரையும் சந்திக்க வரவில்லை என திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் அனைவரும் எதிர்பார்த்தது போலவே மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி.
மேலும் படிக்க: இ.பி.எஸ் ஆடும் "சதுரங்க" ஆட்டம்! ஸ்டாலின் போட்ட கணக்கு பொய்யாச்சா? இது லிஸ்ட்லயே இல்லையே!
சமாளித்த எடப்பாடி பழனிச்சாமி :
இந்த சந்திப்பு குறித்து கேட்டதற்கு, மக்கள் நலன் தொடர்பாக சந்தித்ததாக விளக்கமும் சொல்லி இருக்கிறார்கள். டில்லியில் இருந்து சென்னை திரும்பி எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்ட போதும் இதே போன்ற பதிலை சொல்லி சமாளித்தார். "நீங்க எப்படி கேட்டாலும் என்னுடைய பதில் இது தான். எதற்காக சந்திப்பு நடந்தது? என்ன பேசினோம்? என்ன முடிவு செய்தோம்? என்றெல்லாம் கேட்கக் கூடாது. கேட்டாலும் சொல்ல மாட்டோம்" என்ற ரேஞ்ஜில் பதில் அளித்து விட்டு சென்று விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
டில்லியில் நடந்தது என்ன?
ஆனால் டில்லியில் நடந்ததே வேறயாம். அனைவரும் கணித்தது போலவே கூட்டணி குறித்து பேசி, முடிவு செய்து, பல விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள தான் அதிமுக முக்கிய நிர்வாகிகள் அனைவரும் அவசரமாக டில்லி புறப்பட்டு சென்றுள்ளனர். டில்லியில் இருந்து அழைப்பு வந்ததன் பேரில் தான் இவர்கள் புறப்பட்டு சென்றதாகவும் கூட ஒரு தகவல் சொல்லப்படுகிறது. எது எப்படியோ, இப்போது அதிமுக-பாஜக தலைவர்கள் சந்திப்பு நடந்து விட்டது. இந்த சந்திப்பில் என்ன பேசினார்? என்ன முடிவு செய்தார்கள்? அதிமுக-பாஜக கூட்டணி உண்டா-இல்லையா? அதை மட்டும் சொல்லுங்க என கேட்கும் உங்களின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. விஷயத்திற்கு வருவோம்.
மேலும் படிக்க: ஹோண்டா QC1 – குறைந்த விலையில் EV ஸ்கூட்டர்! நம்பலாமா?
அதிமுக போட்ட கன்டிஷன் :
2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக., கூட்டணி அமைப்பது ஏறக்குறைய முடிவாகி விட்டது. அதிமுக-பாஜக கூட்டணி, அதிமுக தலைமையில் தான் அமைய வேண்டும். முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என அதிமுக கன்டிஷனாக சொல்லி உள்ளதாம். இந்த கன்டிஷன்களுக்கு பாஜக.,வும் ஓகே சொல்லி விட்டதாகும். அதே போல் அதிமுக.,வில் இருந்து பிரிந்த சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க சொல்லி அதிமுக தலைமையை நிர்பந்தம் செய்ய மாட்டோம் என அமித்ஷா தரப்பில் திட்டவட்டமாக சொல்லப்பட்டு விட்டதாம். அதிமுக சார்பில் முன்வைக்கப்பட்ட சில நிபந்தனைகளையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இரு தரப்பினருமே இறங்கி வந்து பரஸ்பர கன்டிஷன்களுக்கு ஒப்புக் கொண்டு விட்டதால் டீல் பேசி முடிக்கப்பட்டு, கூட்டணியும் உறுதியாகி விட்டதாம்.
அடுத்த பிளான் என்ன?
விரைவில் பாஜக மூத்த தலைவர்கள் கொண்ட குழு டில்லியில் நியமிக்கப்பட்டு, சீட் ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சனைகளை பேசி முடிவு செய்ய போகிறார்களாம். இன்னும் மீதம் இருக்கும் சில விஷயங்களும் பேசி முடிவு செய்யப்பட்ட பிறகு ஏப்ரல் மாதத்தில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது. கூட்டணி அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு இரண்டு கட்சிகளும் இறங்கி வேலை செய்ய முடிவு செய்து விட்டார்களாம். இதனால் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அக்னி வெயிலுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்கும் என தெரிகிறது.
மேலும் படிக்க: ஷூ"-வை மாற்ற மறந்த கொள்ளையர்கள்.. கனகச்சிதமாக தட்டித் தூக்கிய இன்ஸ்பெக்டர் "பாண்டியன்" - என்கவுன்ட்டர் பின்னணி!
ஓபிஎஸ் நிலை என்ன ஆகும் ?
இதற்கிடையில் அதிமுக - பாஜக கூட்டணி உருவாக உள்ளதை முன்பே தெரிந்து கொண்டு தான் ஓபிஎஸ், எது நடந்தாலும் நன்மைக்கே என அமித்ஷா-எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது முன்கூட்டியே துண்டு போடும் வேலை என்பது அதிமுக.,விற்கு தெரியும். அதனால் தான் உஷாராக, ஓபிஎஸ் செயல்பாடுகளை முன்பே கணித்து, பிரிந்தவர்களை கட்சியில் மீண்டும் ஒன்று சேர்க்க நிர்பந்தம் செய்யக் கூடாது என்ற கன்டிஷனை வலுவாக போட்டுள்ளதாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்