
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் திமுக தேர்தல் பணிகளை விரைந்து முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் இலக்கு வைத்து திமுக தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்பதற்காக திமுக தொடர்ந்து உழைத்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த அதிமுக பாஜக கூட்டணி தற்பொழுது மீண்டும் கூட்டணியை அமைத்து இருக்கிறது. இந்த கூட்டணியை வெற்றி பெற வைக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை திமுக எடுத்து வருகிறது.
தேர்தலை ஒட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 'மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம்' என்கிற பெயரில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். அதன் முதற்கட்டமாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன் கோயிலில் சாமி தரிசனத்துடன்கடந்த 8 -ஆம் தேதி தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில்தான் தமிழகத்தில் கூட்டணிக்கட்சி ஆட்சி அமைக்கும் என பலமுறை அமித்ஷா பேசியபிறகு கறுப்பாகிப்போன இ பி எஸ் “நாங்கள் ஒன்னும் ஏமாளிகள் அல்ல” எனகூறியிருந்தார். அதுமட்டுமின்றி “சி பி எம் -ம் , விசிக வும் பல அவமானங்களை கடந்து ஏன் திமுக கூட்டணியில் இருக்க வேண்டும் எங்களை நோக்கி வருவோருக்கு இரத்தின கம்பளம் விரிப்பவர்கள் நங்கள் என பேசி பகிரங்க கூட்டணிக்கு அழைத்துள்ளார். இது எல்லாம் ஒருபுறம் இருக்க ,
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளர் மணி பேசுகையில்”அதிமுக வை பலகீனப்படுத்துவதே பாஜக -வின் முக்கிய குறிக்கோள்!! 2026 தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும் பரவாயில்லை எவ்வளவு தூரம் அதிமுக -வை பலவீனப்படுத்தமுடியுமோ அவ்வளவு தூரம் அதற்கான வேலைகளை முழுமூச்சுடன் செய்கிறது பாஜக. அமித்ஷாவிலிருந்து அண்ணாமலை வரை அனைவருமே இதைத்தான் செய்கின்றனர். பல தலைவர்கள், இன்னமும் விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னமும் கட்சி பலவீனப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது ” என பேசியுள்ளார்.
இதன் மூலம் அதிமுக -பாஜக கூட்டணியில் சலசலப்பு வழுதிருப்பது கண்கூடாக தெரிகிறது. ஜூலை 26 ஆம் தேதிக்கு பதில் 29ம் தேதியில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் இபிஎஸ் பயணம் மேற்கொள்வார் என்று பயணத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் 26 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காகவே இந்த பயண திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-இபிஎஸ் சந்திப்பின்போது பாஜக-அதிமுக கூட்டணி அறிவிப்பு வெளியாகி இருந்து. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி- மோடி சந்தித்தால் கூட்டணிக்கு பிறகு இருவருக்குமான முதல் சந்திப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை எடப்பாடி மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் கூட்டணியில் நிகழும் சலசப்பு குறித்து முறையிடவும், முதல்வர் வேட்பாளர் தான்தான் என்பதை வலியுறுத்தவும் வாய்ப்புள்ளதாக சில ஆர்வலர்கள் கூறுகின்றனர். வேறுசிலர், இவை அணைத்து மோடிக்கு தெரிந்து அவரின் ஒப்புதலோடுதான் நடக்கிறது. எனவே அவருக்கு தெரியாமல் இது நிகழ வாய்ப்பில்லை, எடப்பாடி உண்மையில் சிக்கிக்கொண்டார், அவரை காப்பற்றுவாரா? இல்லை கட்சியை காப்பற்றுவாரா? என்பது காலப்போக்கில்ல்தான் தெரியும் என வேறு கூறிவருகின்றனர்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.