"மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவில் சேரலாம்" அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை!

"மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவில் சேரலாம்" அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை!

Published on

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வந்த நிர்வாகிகள், கழகத்தின் கொள்கை, குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான செயல்களில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், தங்களின் தவறுகளை உணர்ந்து, கட்சியின் பொதுச்செயலாளரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால், மீண்டும் கட்சியில் சேர்ந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சி தலைவி அம்மா ஆகியோரின் காலந்தொட்டு, இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே, மீண்டும் கட்சியில் சேர்ந்துகொள்ள விரும்புவோர், மேற்கூறப்பட்டுள்ள நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், என அதிமுக பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com