சமத்துவ பொங்கல் விழா எம்.பி. கனிமொழி பங்கேற்பு..!

சமத்துவ பொங்கல் விழா எம்.பி. கனிமொழி பங்கேற்பு..!

Published on

மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்ப கூடியவர்களுக்கு சவால் விடும் வகையில் பொங்கல் விழாகொண்டாடப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. சார்பில் சென்னை துறைமுகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டனர்.இதில் பெண்களுக்கு சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசு வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, சென்னை சவுக்கார் பேடடையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் எம்.பி. கனிமொழி பங்கேற்றார்.  இறுதியாக கொண்டித்தோப்பு பகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்ற கனி மொழி மற்றும் அமைச்சர் சேகர் பாபு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com