நேற்றைய தினம் பேராண்டி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விசிக கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்..
அப்போது பேசிய அவர், இப்போதெல்லாம் திரைப்படத்திற்கு வைக்கும் பெயர்களே வித்தியாசமாக உள்ளது. 2k கிட்ஸ்க்கு பிடிக்கும் வகையில் தான் பெரும்பாலும் ஆங்கிலத்திலும், கவர்ச்சிகரமான பெயர்கள் தான் சுட்டப்படுகிறது..
தற்போதைய திரைப்படங்களில் அரசியல் நெடி, சில படங்கள் சாதி பெருமிதங்கள், சில படங்களில் சாதி ஒழிப்பு அரசியலை பேச வேண்டும் என்கின்ற கருத்தியலையும் பார்க்கிறோம்.
இந்த காலத்துக்கு இளைஞர்களுக்கு ஏற்ப இயக்குனர்கள் படங்களுக்கு பெயர் சூட்டுவதில் கவனமாக இருக்கிறார்கள்.
நான் பார்த்த முதல் படமே உலகம் சுற்றும் வாலிபன் தான். அப்போது நான் 8 வது படித்துக்கொண்டு இருந்தேன். பீடி,சிகரெட் பிடிப்பது எப்படி தவறோ அதுபோல சினிமாவுக்கு பார்க்க போனால் குற்றம் என்ற மன நிலை இருந்து காலம் அது. அதன் பிறகு கல்லூரி நாட்களில் திருட்டு தனமாக தான் படம் பார்ப்போம்.
நான் என் அப்பா அனுமதியோடு உலகம் சுற்றும் வாலிபன் படம் முதன் முதலில் பார்க்க போனேன். நான் 8 வது படித்துக்கொண்டு இருந்த போது அந்த படம் ஒன்றும் புரியவில்லை. இப்போது வரக்கூடிய பாடலில் இரைச்சல் தான் அதிகம் உள்ளது வரிகளே புரிவதில்லை உற்றுகவனித்தால் தான் புரிகிறது.
ஆனால் பழைய பாடல்களில் இசைகள் இனிமையாகவும், வரிகள் ஆழமாக பதியும். அது கண்ணதாசன், வாலி உடுமலை நாராயணகவி எழுதிய வரிகளாக இருந்தாலும் அருமையான வரிகளாகவும் ஊக்கம் தரக்கூடிய வரிகளாகவும் மனதில் ஆழமாக பதியக்கூடிய வார்த்தைகளாகவும் இருக்கும். அதற்கு உயிர் தரக்கூடிய வகையில் இளையராஜாவின் இசை இருக்கும். இளையராஜாவின் இசை பல கிராமங்களை ஆட்டிப்படைத்தது.
திருமணம் என்றாலே சாதி குறுக்கிடும். அகமண முறை தான் சமூகத்தில் இருக்கக்கூடிய நடைமுறை. சட்டத்திற்கு புறம்பான நடைமுறைதான் ஆனால் அதுதான் சமூக நடைமுறையாக உள்ளது.
ஒரே சாதியில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற நடைமுறை நீண்ட காலமாக உள்ளது. சட்டம் அதை தடை செய்யவில்லை ஆனாலும் அப்படி ஒரு நடைமுறை பல்வேறு பிரச்சினைகளுக்கு இடம் கொடுக்கிறது அது ஆணவக் கொலை வரை செல்கிறது..
திரைக்கதை சிறப்பாக இருந்தாலும் இசை முக்கியமானது. பின்னணி இசை சரியாக அமையவில்லை என்றால் படத்தின் வெற்றிக்கு சிரமம்.
அண்மைக்காலமாக திரைத்துறையை சார்ந்த நண்பர்கள் என்னை திரைப்பட நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள். அப்போதெல்லாம் நான் திரைப்படத்திற்கு முக்கியத்துவம் தருவதில்லை.
மின்சாரம் என்ற படத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக நடித்த தீர வேண்டும் என்று தயாரிப்பாளர் கேட்டார், சரி படத்திலாவது ஒரு நாள் முதலமைச்சராக இருப்போமே என்று ஆசைப்பட்டு ஒப்புக்கொண்டேன்.
அப்போது கதையே தெரியாது, ஏனோ தெரியவில்லை சிறுவயதில் இருந்தே திரைப்படத்தின் மீது தவறான மதிப்பீடு உருவாகிவிட்டது. ஆனால் இன்று
பல திரை பட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன் இதன் மூலம் திரையுலகத்தின் வலிமை என்னவென்று புரிந்து கொள்ள பயன்படுகிறது.
தமிழ்நாடு அரசியலே திரைக்கவர்ச்சியின் கட்டுப்பாட்டில் இருப்பதை பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் எம் ஜி ஆர், அதன் பிறகு அவரின் கலை உலக வாரிசுகள் பாக்கியராஜ், சிவாஜி கணேசன் விஜயகாந்த், சரத்குமார் , டி ராஜேந்தர் பல பேர் கட்சி தொடங்கினார்கள்.
கலைஞரும் திரை துறையில் ஈடுபாடு இருந்தவர்தான். இன்றைய முதலமைச்சர் கூட ஓரிரு படங்களில் நடித்தவர்தான், ஜெயலலிதாவும் திரைத்துறையில் இருந்து வந்தவர். ஏன் விஜய் வரையிலும் தமிழ் திரை உலகம் எந்த அளவிற்கு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை பார்க்க முடிகிறது. இன்றளவுக்கு அரசியலில் சினிமா கவர்ச்சி குறைந்த பாடில்லை.
ஒவ்வொரு மாநிலத்திலும் சூப்பர் ஸ்டார் இருக்கிறார்கள். ஆனால் நம் தமிழ்நாட்டில் தான் நிறைய ஸ்டார்கள் உள்ளார்கள் சூப்பர் ஸ்டார் சுப்ரீம் ஸ்டார், பவர் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், என்றெல்லாம் உள்ளார்கள்.
எந்த மாநிலத்திலும் திரைத்துறை அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. என் டி ஆர், எம் ஜி ஆர் இரண்டு பேரு தான் சினிமாவிலிருந்து வந்து அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தினர்..
ராணுவத்தில் வேலை செய்து ரிட்டையர்டானவர்கள் வாட்ச்மேனாக ஆகிறார்கள் திரைத்துறையில் ரிட்டையர்டானவர்கள் சி.எம் ஆகிறார்கள். தமிழ்நாட்டு அரசியல் இப்படி இருக்கு என்று சோசியல் மீடியாவில் படித்தேன்.
திரைத்துறையில் ஓய்வு பெறுகிறவர்கள்,இன்னும் 200,300 கோடி என்னால் சம்பாதிக்க முடியும் என்று சொல்லிவிட்டு திரைத்துறைக்கு விஆர்எஸ் கொடுத்துவிட்டு வருகிறவர்கள் எல்லாம் முதலமைச்சர் கனவோடு வருகிறார்கள். மக்களை சினிமா ஏதோ ஒரு வகையில் ஆதிக்கம் செலுத்துகிறது. மக்களின் வாழ்வியலை பேசுகின்ற ஒன்றுதான் சினிமா.
சினிமா பெரிய அளவில் சமூக மாற்றத்தை சக்தியாக விளங்கும். ஆனால் முற்போக்கு தனமான படமாக இருக்க வேண்டும்..
ஓரிரு படங்களை வெற்றிகரமாக கொடுத்து விட்டால் அரசியலுக்கு சென்று விடலாம் என்ற உளவியலை கட்டமைத்துள்ளது. முதலமைச்சர் பதவியையும்,பிரதமர் பதவியையும் ஒப்பீடு செய்து பார்க்க வேண்டிய தேவை உள்ளது. உண்மையான அதிகார பொறுப்பு பிரதமருக்கு தான் உள்ளது. ஆனால் நாம் யாரும் அதற்கு ஆசைப்படுவதில்லை முதலமைச்சர் ஆகதான் ஆசைப்படுகிறோம்.
முதலமைச்சர் பதவி தான் அல்டிமேட் பவர் என்று நினைக்கிறோம் ஆனால் முதலமைச்சர் பதவி என்பது தாசில்தார் ஆபிஸ் போல, அது கலெக்டருக்கும் கீழ் தான். கொள்கை முடிவுகள், சமூக மாற்றங்கள் ஏற்படுத்த முடியாது. உண்மையான அரசியல் அதிகாரம் பிரதமருக்கு தான் உள்ளது.
தமிழர்களுக்கு யாருக்கும் பிரதமர் ஆக வேண்டும் என்ற எண்ணமே இல்லை. பிரதமர் ஆனால் ஈழத் தமிழர்களின் பிரச்சனையை தீர்க்க முடியும். முதலமைச்சரானால் தீர்க்க முடியாது
இன்னும் அந்த அடிப்படையை நம் மக்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். முதலமைச்சர் ஆகிவிட்டால் ஈழத் தமிழர் பிரச்சனையை தீர்த்து விடலாம் என்று நினைக்கிறார்கள் அது முடியவே முடியாது. முதலமைச்சர் என்பவர் 30 பேர்களில் ஒரு ஆள். முதலமைச்சர் பதவி குறைத்து மதிப்பிடவில்லை ஒரு ஒப்பீடு தேவை என்று தான் சொல்கிறேன்.
திரைத்துறையில் நாம் பேசும் அரசியல் உலகமே ஜனநாயகத்தை வலியுறுத்தும் நிலையை அடைந்துள்ளோம். ஜனநாயகம்தான் இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு.உலகம் முழுவதும் gen z புரட்சி நடைபெற்று வருகிறது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஒன்றே ஒன்றுதான் போராடுகிறார்கள்.சமத்துவம் அதுதான் ஜனநாயக சிந்தனை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.